சில வரி செய்திகள்| Dinamalar

சில வரி செய்திகள்

Added : ஆக 30, 2021
Share
3 பேருக்கு 'வாரன்ட்'டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்றோருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில், பலரின் பெயர் போலியாக சேர்க்கப்பட்டு அரசு நிதியில் மோசடி நடந்தது உறுதியானது. இது தொடர்பாக இரு ஆய்வகங்கள் மற்றும் அவற்றை ஒப்பந்தம் செய்த நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த மல்லிகா, ஷரத் பந்த் மற்றும்

3 பேருக்கு 'வாரன்ட்'

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்றோருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில், பலரின் பெயர் போலியாக சேர்க்கப்பட்டு அரசு நிதியில் மோசடி நடந்தது உறுதியானது. இது தொடர்பாக இரு ஆய்வகங்கள் மற்றும் அவற்றை ஒப்பந்தம் செய்த நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த மல்லிகா, ஷரத் பந்த் மற்றும் ஆய்வக உரிமையாளர் டாக்டர் நவ்தேஜ் நல்வா ஆகியோருக்கு ஜாமினில் வர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பித்து ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

என்கவுன்டரில் கொள்ளையன் பலி

ஆக்ரா: உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, பரத்பூர் உட்பட பல இடங்களில் நடந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் தாக்குர் கைதானார். இவர் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக நண்பரின் வீட்டிற்கு போலீசார் நேற்று அவரை அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கியதுடன், அவர்களில் ஒருவரின் துப்பாக்கியை பறித்து முகேஷ் தப்பினார். பிடிக்க முயன்ற போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் முகேஷ் தாக்குர் கொல்லப்பட்டார்.

மத்திய அமைச்சர் ஆஜராகவில்லை

அலிபாக்: மஹாராஷ்டிராவில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதுாறாக பேசியதாக, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நாராயண் ராணே சமீபத்தில் கைதானார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், நேற்று மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் அலிபாக் எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதனால் நேற்று எஸ்.பி., அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது நேரில் ஆஜரான அமைச்சரின் வழக்கறிஞர், 'அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக இயலவில்லை' என, போலீசாரிடம் தெரிவித்தார்.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதி வழியாக நேற்று அதிகாலை பயங்கரவாதி ஒருவர் நம் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றார். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

வீடு இடிந்து ஏழு பேர் பலி

பித்தோராகர்: உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மலைப்பகுதியில் உள்ள ஜும்மா கிராமத்தில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன.மீட்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையில் பலியான மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வீடுகளில் இருந்த மற்றவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்பதால் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X