அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் நாளை முதல் வகுப்புகள் துவக்கம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. நேரடி வகுப்புகள் நடத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கேரளா உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமுள்ள, பிற மாநில எல்லையோர மாவட்டங்களில், மாற்று ஏற்பாடாக ஆன்லைன் வகுப்புகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மே, 6ல் ஊரடங்கு
 பள்ளி, கல்லூரிகள்,  நாளை , வகுப்புகள் துவக்கம்...

சென்னை தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. நேரடி வகுப்புகள் நடத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கேரளா உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகமுள்ள, பிற மாநில எல்லையோர மாவட்டங்களில், மாற்று ஏற்பாடாக ஆன்லைன் வகுப்புகளை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மே, 6ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்து, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டும் நடந்து வருகின்றன. இந்நிலையில், தொற்று பரவல் பெருமளவு குறைந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாளை முதல் மாநிலம் முழுதும், பள்ளி, கல்லுாரிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மட்டும் பள்ளி மாணவர்களும்; முதலாம் ஆண்டை தவிர, மற்ற கல்லுாரி மாணவர்களும், நேரடி வகுப்புகளுக்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
வரும், 15ம் தேதிக்கு பின், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் அறிவிப்புஇதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக, பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்பட, நாளை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து, முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
கேரளாவில், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அங்கிருந்து தமிழக கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்கள், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை சான்று மற்றும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாணவ, மாணவியருக்கான அரசு மற்றும் தனியார் விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான தங்கும் விடுதிகளும் கொரோனா வழிகாட்டு முறைப்படி இயங்கலாம். விடுதி காப்பாளர்கள், சமையலர், அனைத்து வகை பணியாளர்களும், கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எல்லையோர மாவட்டங்கள்தமிழக அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் எல்லையோரம் உள்ள மாவட்டங்களில், அந்த பகுதிகளின் சூழலை பொறுத்து, நேரடி வகுப்புகள் நடத்தலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்தால், எல்லை மாவட்ட பள்ளிகள் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டாம்; மாற்று ஏற்பாடாக, ஆன்லைன் வகுப்புக்களை தொடரலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


தடுப்பூசி கட்டாயம்பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும், கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களிடம் சமர்பிக்க வேண்டும். ஊசி போடாதவர்கள் பணிக்கு வர அனுமதியில்லை என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாளை முதல் அனைத்து கல்லுாரிகளிலும், மாணவ, மாணவியருக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வர, பெற்றோர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.-


பஸ்களில் இலவச பயணம்
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், நாளை முதல் இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கும் வரை, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள், ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக் உள்ளிட்டவற்றின் சீருடை அணிந்து வந்தாலோ அல்லது புகைப்படம் ஒட்டிய கல்வி நிறுவன அடையாள அட்டையை காட்டினாலோ, இலவச பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும் என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


வகுப்புகள் எப்போது?* பள்ளிகள் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், 20 மாணவர்கள் இருக்கும் வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும். இட பற்றாக்குறை இருந்தால், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

* கல்லுாரிகளில் இறுதியாண்டு படிப்புக்கு வாரத்தில் ஆறு நாட்களும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளும், மற்ற நாட்களில் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படும்
.

* முதலாம் ஆண்டில் சேருவோருக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு எதிராக வழக்கு
திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கொரோனா ஊரடங்கால், பள்ளி மாணவர்கள் கல்வியை தடையின்றி தொடர, 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன. ஒன்பது முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் வகுப்புகள் துவங்க, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது. பள்ளிகளில், சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை. நேரடி வகுப்பு மட்டுமன்றி, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oru Indiyan - Chennai,இந்தியா
01-செப்-202100:05:37 IST Report Abuse
Oru Indiyan மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏதாவது நடந்தால், பொறுப்பை ஏற்று கொண்டு ஆட்சியை விட்டு விலகி விட வேண்டும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
31-ஆக-202119:24:26 IST Report Abuse
Mohan முன்பு பள்ளி கல்லூரி திறந்த போது தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பள்ளியில் தான் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆரம்பித்தது 2ஆம் அலைத்தொற்று.3ஆம் அலையின் பிறப்பிடம் எந்த ஊர் பள்ளியோ, கல்லூரியோ. ஆண்டவா யாருக்கும் தொற்றேற்றாமல் காப்பாற்று.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
31-ஆக-202117:11:11 IST Report Abuse
s t rajan பள்ளிகளை திறக்கும் முன் சினிமா, பீச், வர்த்தக வளாகங்கள் போன்ற வற்றை மூடுங்கள். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்பட வில்லை. ஆகவே சிறுவர்கள் அங்கு சென்று தொற்றில் அகப்பட்டு மற்றவர்களுக்கும் பரவுவதை தடுக்கலாம். யோசித்து செயல் படுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X