'ஜீன்ஸ் பேன்ட்'டில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கண்ணுார்-கேரளாவில் 'ஜீன்ஸ் பேன்ட்' டில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். சோதனைகேரளாவின் கன்ணுார் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம் எதுவும் இல்லை என அனுப்பி விட்டனர். அந்த நபர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டில் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் திட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகம்
 'ஜீன்ஸ் பேன்ட்'டில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது

கண்ணுார்-கேரளாவில் 'ஜீன்ஸ் பேன்ட்' டில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

சோதனைகேரளாவின் கன்ணுார் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம் எதுவும் இல்லை என அனுப்பி விட்டனர். அந்த நபர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டில் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் திட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை திரும்ப அழைத்து சோதனையிட்டனர்.

அப்போது பேன்டில் ஒட்டியிருந்த மஞ்சள், சாதாரண பொருள் அல்ல; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்பது தெரியவந்தது. அந்த பேன்டின் உட்புறத்தில் தங்கத்தை பசையாக குழைத்து தடவி, அதன் மேல் ஒரு உறை போல துணி வைத்து ஜீன்ஸ் பேன்ட் தைக்கப்பட்டுஉள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நுாதன முறைஉடல் வெப்பத்தில் தங்கப் பசையின் ஈரம் பேன்டின் வெளிப்புறம் ஊடுருவி ஆங்காங்கே திட்டு திட்டாக வெளிப்பட்டு கடத்தலை காட்டிக் கொடுத்து விட்டது.

''தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டுஉள்ளார்; நுாதன முறையில் கடத்திய இந்த தங்கப் பசையின் மதிப்பு 14 லட்சம் ரூபாய்' என, சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். இதேபோல சமீபத்தில் ஷார்ஜாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் விமான நிலையம் வந்திறங்கிய ஒருவர், தங்கம் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரது உள்ளாடையில் 1,893 கிராம் தங்கப் பசையை கடத்தி வந்தார். அதில் இருந்து 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X