பொது செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூர் டூ கோயம்புத்தூர் பஸ் சேவை துவக்கம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : திருவொற்றியூரில் இருந்து கோயம்புத்துார் மற்றும் ராமேஸ்வரத்திற்கு, புதிய சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன.சென்னை, திருவொற்றியூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதன்படி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலில், திருவொற்றியூரில் இருந்து கோயம்புத்துாருக்கு தடம் எண்

திருவொற்றியூர் : திருவொற்றியூரில் இருந்து கோயம்புத்துார் மற்றும் ராமேஸ்வரத்திற்கு, புதிய சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன.சென்னை, திருவொற்றியூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதன்படி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலில், திருவொற்றியூரில் இருந்து கோயம்புத்துாருக்கு தடம் எண் 460 'டி', ராமேஸ்வரத்திற்கு தடம் எண் 166 'டி' ஆகிய சொகுசு பேருந்துகள், நேற்று காலை முதல் இயக்கப்பட்டன.துவக்க விழாவில்,திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர், மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம், வடசென்னை எம்.பி., கலாநிதி ஆகியோர் பங்கேற்று, புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கினர்.இது தவிர, திருவொற்றியூர் - தாம்பரம் செல்லும் தடம் எண் 1 'பி' சொகுசு பேருந்தும், அம்பத்துார் தொழிற்பேட்டை செல்லும் தடம் எண் 34, இரண்டு விரைவு கட்டண பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டது. பிராட்வே செல்லும் தடம் எண் சி 56 சி, இரண்டு சாதாரண கட்டண பேருந்துகளும், ஓடியன்மணி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண், 15 'பி' ஆகிய பேருந்துகளும் துவக்கி வைக்கப்பட்டன.

விழாவில், சி 56 சி பேருந்தை திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் இயக்கி துவக்கி வைத்தார்.இதே போல், மணலி புதுநகரில் இருந்து பிராட்வேக்கு தடம் எண், 56 'ஜெ', எழும்பூருக்கு தடம் எண், 28 'ஏ', கோயம்பேடுக்கு தடம் எண் 121 'டி' ஆகிய பேருந்துகளை, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் துவக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X