கோப்பென்ஹகென்: கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை உலக நாடுகள் பலவற்றில் பரவிவரும் நிலையில் இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரிக்கை வெளியிட்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய கண்டத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் மேலும் 2 லட்சத்து 36 ஆயிரம் குடிமக்கள் வைரஸ் தாக்கத்தால் மரணமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தில் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் டெல்டா வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பால்கன்ஸ், கக்காசஸ், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் டெல்டா ரகத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் மரண எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மேற்கண்ட பகுதிகளில் மரண எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்ததை அடுத்து டிசம்பர் துவக்கத்தில் 2 லட்சத்து 36 ஆயிரம்பேர் மரணம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இதுவரை 13 லட்சம்பேர் வைரஸ் தாக்கத்திற்கு மரணமடைந்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 53 உறுப்பினர் நாடுகளில் 33 நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மரண எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது.

தடுப்புமருந்து பற்றாக்குறை காரணமாகவே மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கோடைகால சுற்றுலாவுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஐரோப்பிய கண்டத்தில் பல நாடுகளில் வெகுவாக தளர்த்தப்பட்டு உள்ள காரணத்தால் பலர் மரணமடைகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக 6 சதவீத மக்களுக்கு தடுப்புமருந்து இரண்டு செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும்தான். பெருவாரியான நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் மூடப்பட்ட சிறிய அறையில் வகுப்புகள் நடத்தத்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE