பொது செய்தி

தமிழ்நாடு

பெசன்ட் நகரில் வணிக மனையானது பொது பாதை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, பெசன்ட் நகரில், மக்கள் பயன்பாட்டில் இருந்த பொது பாதையின் ஒரு பகுதியை, வணிக மனை என்று குறிப்பிட்டு, வீட்டுவசதி வாரியம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.சென்னை, பெசன்ட் நகர் முதலாவது விரிவாக்க திட்டத்தை, வீட்டுவசதி வாரியம், 1993ல் உருவாக்கியது. மொத்தம், 43.41 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.இதில், பல்வேறு கட்டங்களாக மனைகள்
 பெசன்ட் நகரில் வணிக மனையானது பொது பாதை

சென்னை : சென்னை, பெசன்ட் நகரில், மக்கள் பயன்பாட்டில் இருந்த பொது பாதையின் ஒரு பகுதியை, வணிக மனை என்று குறிப்பிட்டு, வீட்டுவசதி வாரியம் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, பெசன்ட் நகர் முதலாவது விரிவாக்க திட்டத்தை, வீட்டுவசதி வாரியம், 1993ல் உருவாக்கியது. மொத்தம், 43.41 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.இதில், பல்வேறு கட்டங்களாக மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இருப்பினும், இங்குள்ள கோஸ்டல் சாலையில், குறிப்பிட்ட சில மனைகள் விற்பனை செய்யப்படாமல் இருந்தன.இதில், 54வது மனை வணிக பயன்பாட்டுக்காகஒதுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த மனை தனியார் ஒருவரின் குடியிருப்பு பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்பட்டது.வாரிய அறிவிப்புஇங்கு, 53 மற்றும் 54வது மனைகளுக்கு இடைப்பட்ட, 1,386 சதுர அடி நிலம், '53ஏ' என்ற பெயரில், வணிக மனை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனையை, பொது ஏலம் வாயிலாக விற்பனை செய்வதற்கானஅறிவிப்பை, வீட்டுவசதி வாரிய பெசன்ட் நகர் கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இந்த மனைக்கான ஆரம்ப விலை, 1.31 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்., 22 வரை இதற்கான ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.இது குறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:தற்போது வீட்டுவசதி வாரியம் ஏலம் விடுவதாக அறிவித்துள்ள, 53ஏ மனை, இங்கு பல ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கோஸ்டல் சாலையின் பின்புறம் இருந்த சுடுகாட்டுக்கும், கடற்கரை பகுதிக்கும் மக்கள் சென்று வர இதுவே பாதையாக இருந்தது.வீட்டு வசதி வாரிய வரைபடத்தில், வணிக மனையாக காட்டப்பட்டுள்ள பகுதி தவிர்த்து, அதன் பின் உள்ள பகுதிகள், பாதையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, பொது பாதையை வணிக மனையாக வீட்டுவசதி வாரியம் விற்பனை செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வாரியத்தின் மனைப்பிரிவு திட்டத்துக்கு, 1993ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது.

அப்போது, இங்கு மக்கள் பயன்பாட்டில் இருந்த பாதை பகுதி குறித்த விபரங்களை, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மறைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.நிலத்தின் அமைப்பு, தன்மை, பயன்பாடு குறித்த ஆய்வு செய்யாமல், பாதையை, மனையாக குறிப்பிட்டு இருக்கலாம். எனவே, அதிகாரிகள் இதை மறு ஆய்வு செய்து இங்கு பாதை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். ஏலம் அறிவிப்பில் திடீர் குழப்பம்  விதி மீறுகிறதா வீட்டு வசதி வாரியம்?நில வகைபாடு குழப்பம்!நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:வீட்டுவசதி வாரியம், 1993ல் பெற்ற ஒப்புதல் அடிப்படையில், இப்பகுதியை வணிக மனை என்று ஏல அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. சி.எம்.டி.ஏ., இரண்டாவது முழுமை திட்டத்தை, 2008ல் அறிவித்தது.

இதில், நகர நில அளவை அடிப்படையில் நிலங்களின் வகைபாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிலங்கள் 'திறந்த வெளி மற்றும் பொழுதுபோக்கு பகுதி' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வகைபடுத்தப்பட்ட நிலங்கள், வேறு எந்த தேவைகளுக்கும் மாற்றப்படுவதில்லை. நில பயன்பாடு மறுவரையறை செய்யப்படாத நிலையில், இதை எப்படி வணிக மனையாக விற்பனை செய்ய முடியும். அரசு நிறுவனமே இப்படி நில வகைபாடு விதிகளை மீறி, திறந்தவெளி பகுதியை வணிக மனையாக விற்பனை செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.சர்வே எண்ணிலும் சர்ச்சை!பெசன்ட் நகர், கோஸ்டல் சாலையில், 53ஏ மனையை ஏலம் விடுவதற்கான அறிவிக்கையில், பழைய வருவாய் துறை சர்வே எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலங்கள், தற்போது நகர நில அளவை எண் அடிப்படையிலேயே அடையாளம் காணப்படுகின்றன. இந்நிலத்துக்கான பழைய பைமாஷ் எண், வருவாய் துறை சர்வே எண், நகர நில அளவை எண் ஆகியவற்றில் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலம் குறித்த உண்மை நிலவரத்தை வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X