குப்பை கிடங்கு இடம் மாற்றப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கிடங்கு இடம் மாற்றப்படுமா?

Added : ஆக 30, 2021
Share
பரங்கிமலை : பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வேங்கைவாசல் ஊராட்சி செயல்படுகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட, வேங்கைவாசல் பிரதான சாலையோரம், சமூக நலக்கூடத்தையொட்டி, ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது.வேங்கைவாசல் பெரிய ஏரியின் கலங்கலை ஒட்டி, குப்பை கொட்டப்பட்டு வந்த நிலையில்,ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதற்காக, குப்பை கிடங்கை சுற்றிலும், இரும்பு தகடுகள்

பரங்கிமலை : பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வேங்கைவாசல் ஊராட்சி செயல்படுகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட, வேங்கைவாசல் பிரதான சாலையோரம், சமூக நலக்கூடத்தையொட்டி, ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது.

வேங்கைவாசல் பெரிய ஏரியின் கலங்கலை ஒட்டி, குப்பை கொட்டப்பட்டு வந்த நிலையில்,ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதற்காக, குப்பை கிடங்கை சுற்றிலும், இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவமனை விரைவில், திறக்கப்பட உள்ளதாக, ஊராட்சி அதிகாரிகள் கூறிவரும் நிலையில், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X