பொது செய்தி

தமிழ்நாடு

கறிவேப்பிலை வியாபாரிகள் போராட்டம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில், கறிவேப்பிலை வியாபாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால், அங்காடி நிர்வாக குழு அலுவலகம் முன், அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், சென்னை மாநகர மலைகுறவன் கறிவேப்பிலை வியாபாரிகள் சங்கம் சார்பில், 367 பேர் தலைமுறை தலைமுறையாக கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகின்றனர்.இவர்கள், ஆரம்பத்தில் 'எம்'
 கறிவேப்பிலை வியாபாரிகள் போராட்டம்

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில், கறிவேப்பிலை வியாபாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால், அங்காடி நிர்வாக குழு அலுவலகம் முன், அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், சென்னை மாநகர மலைகுறவன் கறிவேப்பிலை வியாபாரிகள் சங்கம் சார்பில், 367 பேர் தலைமுறை தலைமுறையாக கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகின்றனர்.இவர்கள், ஆரம்பத்தில் 'எம்' மற்றும் 'என் - பிளாக்'கில், கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்தனர். கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு திருமழிசைக்கு மாற்றப்பட்டது.அப்போது, கறிவேப்பிலை வியாபாரிகளுக்கு, அங்காடி நிர்வாக குழு அலுவலகம் அருகே, காலிமனையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஆறு நாட்களுக்கு முன், மார்க்கெட்டின், ஏழு மற்றும் எட்டாவது நுழைவாயில் அருகே, கறிவேப்பிலை வியாபாரிகள் மாற்றப்பட்டனர்.வியாபாரிகளிடம் ஆலோசனை செய்யாமல் இடமாற்றப்பட்டதாக, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது, பெய்து வரும் மழையில், புதிதாக கறிவேப்பிலை வியாபாரத்திற்கு மாற்றப்பட்ட இடத்தில், மழை நீர் தேங்கி விடுகிறது.மேலும், கழிவு நீர் கலந்து வருவதால், சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால், கறிவேப்பிலை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல், அங்காடி நிர்வாக குழு அலுவலகம் முன் கறிவேப்பிலை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், விடுமுறை என்பதால் அதிகாரிகள் இல்லை எனவும், நாளை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கலாம் என, அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர்.எந்த முன்னறிவிப்பும் இன்றி, கறிவேப்பிலை வியாபாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாற்று இடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே நாங்கள் வியாபாரம் செய்த இடத்தில், 3 லட்சம் ரூபாய் செலவு செய்து, மண் கொட்டி சமன் செய்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ள இடத்தை சீர்செய்ய, மீண்டும் பணம் செலவு செய்ய வேண்டும்.சி.எஸ்.கங்காதரன்,தமிழக கறிவேப்பிலைவியாபாரிகள் சங்க பொதுச் செயலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X