சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி... கத்தியை காட்டினாலும், 'பாச்சா' பலிக்கல! ஜேப்படி திருடன் 'லபக்'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அனீஸ்குமார், 32. உடுமலைக்கு செல்ல, நேற்று முன்தினம் மதியம், பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்சில் ஏறி அமர்ந்தார். அவரை நோட்டமிட்ட மர்ம நபர், கத்தியால், 'டிராயர்' பாக்கெட்டை கிழித்து அவர் வைத்திருந்த பணத்தை திருடினார். அனீஸ்குமார் கூச்சலிட்டார்.பயணிகள், பொதுமக்கள் என, அனைவரும் அவரை பிடிக்க முயன்றனர். உடனே, கத்தியை காட்டி மிரட்டினார்.
 சில வரி செய்தி... கத்தியை காட்டினாலும், 'பாச்சா' பலிக்கல! ஜேப்படி திருடன் 'லபக்'

திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அனீஸ்குமார், 32. உடுமலைக்கு செல்ல, நேற்று முன்தினம் மதியம், பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்சில் ஏறி அமர்ந்தார். அவரை நோட்டமிட்ட மர்ம நபர், கத்தியால், 'டிராயர்' பாக்கெட்டை கிழித்து அவர் வைத்திருந்த பணத்தை திருடினார். அனீஸ்குமார் கூச்சலிட்டார்.பயணிகள், பொதுமக்கள் என, அனைவரும் அவரை பிடிக்க முயன்றனர். உடனே, கத்தியை காட்டி மிரட்டினார். அருகே சென்ற மக்களை கத்தியை காட்டி விரட்டினார். இதையறிந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் ஓடி சென்று, பிடிக்க முயன்றார். அவரை தள்ளி விட்டு தப்பிக்க முயற்சி செய்தவரை, தெற்கு போலீசார், பிடித்து பணத்தை மீட்டனர். அதன்பின், ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் ஈரோடு மாவட்டம், பவானி, சக்தி நகரை சேர்ந்த மோகனசுந்தரம், 43 என்பது தெரிய வந்தது. இவர் மீது 'ஜேப்படி' உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளனபோலீசார் கூறுகையில், ''அனீஸ்குமார், கார் வாங்கியுள்ளார். இதற்காக 1.10 லட்சம் ரூபாய் செலுத்துவதற்காக உடுமலை புறப்பட்டுள்ளார்; பணம் கொண்டு செல்பவர்கள், எப்போதும் உஷாராக இருக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X