பொது செய்தி

தமிழ்நாடு

'பேக்கேஜ்' டெண்டர் முறை ரத்து; ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு நன்றி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை,-பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிற்கு, ஒப்பந்ததாரர்கள் நன்றி தெரிவித்தனர்.பொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடக்கின்றன.இதற்காக, மாநிலம் முழுதும் நுாற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். முந்தைய

சென்னை,-பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியதற்காக, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிற்கு, ஒப்பந்ததாரர்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடக்கின்றன.இதற்காக, மாநிலம் முழுதும் நுாற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு சில ஒப்பந்ததாரர்கள் மட்டும் பயன்பெறும் வகையில், 'பேக்கேஜ்' அடிப்படையில், பணிகள் மொத்தமாக வழங்கப்பட்டன.

இதனால், 90 சதவீத ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, ஒப்பந்ததாரர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில், ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். துறையின் மானிய கோரிக்கை, சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின், அமைச்சர் வேலு வெளியிட்ட அறிவிப்பில், பேக்கேஜ் டெண்டர் ரத்து, ஒப்பந்ததாரர் பதிவு மூன்று ஆண்டு நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.இதற்கு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் நலச்சங்க நிர்வாகிகள் சங்கர், பாபுகாந்த் ஆகியோர், நேற்று அமைச்சர் வேலுவை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X