பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகள் இன்று நள்ளிரவில் கட்டண உயர்வு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பின், கட்டணம் உயர்கிறது.தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.தேசிய
தமிழகம், 24 சுங்கச்சாவடிகள் இன்று, நள்ளிரவு, கட்டண உயர்வு

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பின், கட்டணம் உயர்கிறது.தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து
வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதற்கு பின், 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.ஆனால், தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 8 - 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, மாநிலத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பின், சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி, கட்டண உயர்வை சுங்கச்சாவடி நிர்வாகங்கள் நடை
முறைப்படுத்த உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
31-ஆக-202110:50:42 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிறைய பொருட்கள் அநியாயமாக விலை ஏறி உள்ளதே அதெல்லாம் தெரியாத அந்த அதிகப்படியான பணம் யாருக்கு செல்கிறது ...இதை வெளிக்கொணர எந்த மீடியாவும் தயார் இல்லையா
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202110:31:18 IST Report Abuse
duruvasar ஓஎம்ஆர் ரோட்டில் சுரங்க ரயில் பணி காரணத்தால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுங்க கட்டணத்தை வசூலை பணிகள் முடியும் வரை ரத்து செய்ய கூறியதை அமல்படுத்தியதிற்க்கு முதல்வரின் அதிரடி மக்கள் நல நடவடிக்கை என்ற ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்ந்த ஊடகங்களும், உடன்பிறப்புகளும் இப்போது மோடிய பிச்சி மேயும். செய்தி தலைப்பிலேயே இது தெரிகிறது. எல்லா நன்மைகளும் அடுத்தவருக்கு, எல்லா துன்பங்களும் எங்களுக்கு மட்டும் என்ற மனநோயை உண்டாகியுள்ள மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நோய்தொற்றிலிருந்து விடுபட எவ்வளவு காலமாகுமோ ?
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
31-ஆக-202110:24:47 IST Report Abuse
Apposthalan samlin மாநில அரசா ? மத்திய அரசா ? எந்த அரசு உயர்த்தினால் மிகவும் கண்டிக்கத்தக்கது . இந்த காரோண நேரத்தில் உயர்த்துவது மக்களிடம் கொள்ளை அடிப்பதுக்கு சமமாகும் . மாநில அரசு உயர்த்தினால் உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கோபத்தை காண்பியுங்கள் . மத்திய அரசு உயர்த்தினாள் பார்லிமென்ட் தேர்தலில் காண்பியுங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X