சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்ததாரர் கடத்தல் மீண்டும் 'பகீர்'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்பூர்:விழுப்புரம் மாவட்டம், கொண்டூரை சேர்ந்தவர் ரவி, 50; கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர்.கடந்த இரு நாட்கள் முன், வெள்ளகோவில், பூமாண்டவலசு கிராமம், வெள்ளியங்காட்டு வலசு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு கரும்பு வெட்ட வந்தனர். இப்பணிக்காக, ரவி, ஐந்து பேரை அழைத்து வந்தார்.நேற்று முன்தினம் பணி முடித்து விட்டு வெள்ளியங்காட்டு வலசு பகுதியில் நடந்து

திருப்பூர்:விழுப்புரம் மாவட்டம், கொண்டூரை சேர்ந்தவர் ரவி, 50; கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர்.கடந்த இரு நாட்கள் முன், வெள்ளகோவில், பூமாண்டவலசு கிராமம், வெள்ளியங்காட்டு வலசு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு கரும்பு வெட்ட வந்தனர். இப்பணிக்காக, ரவி, ஐந்து பேரை அழைத்து வந்தார்.நேற்று முன்தினம் பணி முடித்து விட்டு வெள்ளியங்காட்டு வலசு பகுதியில் நடந்து சென்றபோது, டூவீலர் மற்றும் காரில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ரவியை காரில் துாக்கி போட்டு கடத்தி சென்றது.'விழுப்புரத்தில் ரவிக்கு பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இதனால், ரவி கடத்தப்பட்டிருக்கலாம்' என்று வெள்ளகோவில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளர் மகன், பல்லடம் அருகே வாலிபர் ஆகியோர் கடத்தப்பட்ட நிலையில், மீட்கப்பட்டனர்.இந்நிலையில், மீண்டும் நடந்துள்ள கடத்தல் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X