சட்டப்படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டப்படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

Added : ஆக 31, 2021
Share
சென்னை---சட்ட கல்லுாரிகளில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில் உள்ள, சீர்மிகு சட்ட கல்லுாரி மற்றும், 13 இடங்களில் செயல்படும், அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளன.எல்.எல்.பி., படிப்புடன், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., ஆகிய

சென்னை---சட்ட கல்லுாரிகளில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில் உள்ள, சீர்மிகு சட்ட கல்லுாரி மற்றும், 13 இடங்களில் செயல்படும், அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளன.எல்.எல்.பி., படிப்புடன், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.காம்., ஆகிய படிப்புகள் இணைந்த, ஐந்து ஆண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆக., 4ல் துவங்கியது.இந்த பதிவு, இம்மாதம், 26ம் தேதி முடிவதாக இருந்தது. ஆனால், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. கூடுதல் விபரங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X