அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டடங்களை திறந்தார் முதல்வர்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை-பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்தார். உள்துறை சார்பில், 105.43 கோடி ரூபாய் மதிப்பில், 359 காவலர் குடியிருப்புகள்; ஒன்பது காவல் நிலையங்கள்; 30 தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்புகள்; சென்னை புழல், திருச்சி மத்திய சிறை வளாகங்களில், சிறைத்துறை பணியாளர்களுக்கான, 16
 அரசு கட்டடங்களை திறந்தார் முதல்வர்

சென்னை-பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.

 உள்துறை சார்பில், 105.43 கோடி ரூபாய் மதிப்பில், 359 காவலர் குடியிருப்புகள்; ஒன்பது காவல் நிலையங்கள்; 30 தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்புகள்; சென்னை புழல், திருச்சி மத்திய சிறை வளாகங்களில், சிறைத்துறை பணியாளர்களுக்கான, 16 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 10.40 கோடி ரூபாயில், பணிபுரியும் மகளிர் விடுதி, ஏழு பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன கைத்தறி துறை சார்பில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், 1.83 கோடி ரூபாயில், 5,500 சதுர அடி பரப்பில், நினைவுப்பரிசு விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும், நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் ரகுபதி, காந்தி, கயல்விழி செல்வராஜ், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.முடிவுற்ற பணிகள் திறப்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், வேலுார் மாநகராட்சி பகுதிகளுக்கு, 234.93 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் அபிவிருத்தி திட்டம்; திருச்சி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 293 குடியிருப்புகளுக்கு, 140.22 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 28.24 கோடி ரூபாய் மதிப்பிலான, கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், மதுரை மாநகராட்சியில், 55 கோடி ரூபாயில், பல்வேறு பணிகள்; சேலம் மாநகராட்சியில், 19 கோடி ரூபாயில், பல்வேறு பணிகள் என, மொத்தம், 477.42 கோடி ரூபாயில் முடிந்துள்ளன. இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, காந்தி, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X