பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் பயணியர் அதிகரிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை : மெட்ரோ ரயிலில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையேமெட்ரோ ரயில்இயக்கப்படுகிறது. கொரோனா தாக்கத்தால்இரண்டு முறை, சில மாதங் கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டது.இந்த ரயில் போக்குவரத்து விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை இயக்கப்பட்ட போதே, தினமும், 1 லட்சம் பேருக்கு மேல் பயணம்

சென்னை : மெட்ரோ ரயிலில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையேமெட்ரோ ரயில்இயக்கப்படுகிறது.

கொரோனா தாக்கத்தால்இரண்டு முறை, சில மாதங் கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டது.இந்த ரயில் போக்குவரத்து விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை இயக்கப்பட்ட போதே, தினமும், 1 லட்சம் பேருக்கு மேல் பயணம் செய்தனர்.ரயில் போக்குவரத்து வண்ணாரப்பேட்டைக்கு, இவ்வாண்டு பிப்ரவரியில் இருந்து நீட்டிக்கப்பட்டதும், தினமும் ஒன்றரை லட்சம் பயணியர் வருவர் என, மெட்ரோ நிர்வாகம் எதிர்பார்த்தது. கொரோனா தாக்கம், ரயில் இயக்க நேரம் குறைவால், எதிர்பார்த்த அளவு பயணியர் இல்லை.

இம்மாதம், 23ம் தேதியில் இருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 5:30 மணியில் இருந்து, இரவு 11:30 மணி வரை ரயில் இயக்கப்படுகிறது.காலை, மாலை வேளைகளில், 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை, 7:00 மணியில் இருந்து, இரவு 10:00 மணி வரையும், 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுவதால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஜூலையில் சராசரியாக, 72 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்தனர். இம்மாத துவக்கத்தில் இருந்தே, பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

இம்மாதம், 23ம் தேதியில் இருந்து ரயில் இயக்க நேரம் நீட்டிக்கப்பட்டதால், தினமும் சராசரியாக, 85 ஆயிரம் பேர் வரை வருகை அதிகரித்துள்ளது.விமான நிலையம் - விம்கோ நகர் மெட்ரோ பாதையில், திருவொற்றியூர் தேரடி நிலையம் வரும் அக்டோபரிலும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரும் டிசம்பரிலும், பயணியர் போக்குவரத்துக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.இதனால், மேலும் பயணியர் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள், தினமும், 1.50 லட்சம் வரை பயணியர் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X