அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை வருமாறு வைகோவுக்கு அழைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை-இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான், சென்னையில் வைகோவை நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, வைகோ, ''26 வயதில், நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கிறீர்கள். என் வாழ்த்துகள். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன,''

சென்னை-இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான், சென்னையில் வைகோவை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, வைகோ, ''26 வயதில், நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கிறீர்கள். என் வாழ்த்துகள். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன,'' என்றார்.அதற்கு, ஜீவன் தொண்டமான், ''தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, நுவரேலியாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும். ''தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதற்காக, முதல்வரையும் சந்திக்க இருக்கிறேன். நீங்கள் இலங்கைக்கு வந்து, தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X