அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணி; பா.ம.க., தலைவர் உறுதி

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தர்மபுரி-''அ.தி.மு.க., கூட்டணியில் தான் பா.ம.க., உள்ளது,'' என, அக்கட்சியின் தலைவர் மணி கூறினார்.தர்மபுரியில் நேற்று அவர், கூறியதாவது:தி.மு.க., அரசு, சட்டசபையில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிப்பது பாராட்டத்தக்கது. பா.ம.க.,வின் நீண்ட கால கோரிக்கையின்படி, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அளித்ததுடன், பல்வேறு நல்ல அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.மேகதாது அணை கட்ட, தமிழக

தர்மபுரி-''அ.தி.மு.க., கூட்டணியில் தான் பா.ம.க., உள்ளது,'' என, அக்கட்சியின் தலைவர் மணி கூறினார்.

தர்மபுரியில் நேற்று அவர், கூறியதாவது:தி.மு.க., அரசு, சட்டசபையில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிப்பது பாராட்டத்தக்கது. பா.ம.க.,வின் நீண்ட கால கோரிக்கையின்படி, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அளித்ததுடன், பல்வேறு நல்ல அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.மேகதாது அணை கட்ட, தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று, கர்நாடகா கூறுகிறது.

இதை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஒருநாள் முழு அடைப்பில் ஈடுபட வேண்டும்.செப்., 15 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்படும் என்பதை, அரசு நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். தி.மு.க., அரசு அறிவிக்கும் நல்ல திட்டங்களை, பா.ம.க., வரவேற்கிறது.பா.ம.க., தற்போது வரை, அ.தி.மு.க., கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில், பா.ம.க., மட்டும் தான், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது போல கேள்வி எழுப்பப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
01-செப்-202102:30:05 IST Report Abuse
BASKAR TETCHANA தேர்தலுக்கு தேர்தல் எங்கு பேட்டியின் அளவு அதிகமாகிறது அதற்க்கு தகுந்தாற் போல் கூட்டணியை மாற்றி கொள்வோம். யாரை நம்பினாலும் நம்பலாம் இந்த மரம் வெட்டி கட்சியை மட்டும் நம்பக்கூடாது.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-202112:35:48 IST Report Abuse
vpurushothaman உண்மையைச் சொன்னா மணிக்கு எறிச்சல் வருகிறது. இதுதானே நிதர்சனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X