அரசியல் செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஸ்டாலின் துவக்கி வைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை,-மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை - டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, விழிப்புணர்வு வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அத்துடன்,
 மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு  ஸ்டாலின் துவக்கி வைப்பு

சென்னை,-மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை - டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவை ஒட்டி, விழிப்புணர்வு வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அத்துடன், மகளிர் சுய உதவிக் குழுவினரின், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தையும் துவக்கி வைத்தார்.பொது மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான, துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, முதல்வர் பார்வையிட்டார்.வீடுகளுக்கு கை பம்புகள் வழியே வினியோகிக்கப்படும், குடிநீரின் தரத்தையும் ஆய்வு செய்தார்.முதல்வர் துவக்கி வைத்த, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தில், ஓட்டு வீடுகள் மற்றும், 'கான்கிரீட்' வீடுகளில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான விபரங்கள்.வரைபடங்கள், நீரை குறைவாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

மகளிர் சுய உதவிக் குழுவினர் வழியாக, மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், கையேடுகள் போன்றவை, பொது மக்களிடம் வினியோகிக்கப்படும்.மழை நீர் சேகரிப்பு தொடர்பான, விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள, 'தண்ணீர் தன்னார்வலர்கள் குழு' மகளிர் சுய உதவிக் குழுவினரை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள குழுவினர், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு, நேரடியாக சென்று, மக்கள் இடையே கலந்துரையாடி, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வர்.சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் விபரங்களை, பொது மக்களுக்கு தெரிவிக்க, 200 பணிமனைகளில், தலா, இரண்டு உதவி மையங்கள் வீதம், 400 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உதவி மையத்திற்கு, ஐந்து மகளிர் சுய உதவிக் குழுவினர் வீதம், 400 மையங்களில், 2,000 பேர், சென்னை மாநகராட்சியில் உள்ள, 35 ஆயிரம் தெருக்களுக்கு நேரடியாக சென்று, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த விபரங்களை தெரிவிப்பர்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, வேலு, சேகர்பாபு, எம்.பி., தயாநிதி, எம்.எல்.ஏ., உதயநிதி, நகராட்சி நிர்வாகம் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X