பொது செய்தி

தமிழ்நாடு

புகார்களை விரைவாக பெற மின்னகத்தில் கூடுதல் வசதி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை-மின்சார புகார்களை விரைந்து பெற்று, தீர்வு காண்பதற்காக, 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தில், கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகம் முழுதும் வசிக்கும் மக்கள், மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.அங்கு பாதிக்கப்படுவோர், 94987 94987 என்ற மொபைல்

சென்னை-மின்சார புகார்களை விரைந்து பெற்று, தீர்வு காண்பதற்காக, 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தில், கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும் வசிக்கும் மக்கள், மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது.அங்கு பாதிக்கப்படுவோர், 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். மையத்தில் பணிபுரிவோர் புகாரை பெறும் போது, புகார்தாரர்களிடம் முழு முகவரியை கேட்டு, கணினியில் பதிவு செய்கின்றனர்.

சிலர், முகவரியுடன் அருகில் உள்ள அடையாள குறியீடுகளை கேட்கின்றனர். இதனால், புகார் பெற தாமதமாவதுடன், புகார்தாரரும் அதிருப்தி அடைகின்றனர். இந்நிலையில், புகார்களை விரைந்து பெற, தற்போது, சேவை மையத்தில் கூடுதல் வசதி துவக்கப்பட்டுள்ளது.அதன்படி, மின் வாரியத்தில், மொபைல் போன் எண்ணை பதிவு செய்துள்ளவர்கள், சேவை மையத்தை தொடர்பு கொள்ளும் போது, தங்களின் மொபைல் எண் அல்லது மின் இணைப்பு எண்ணை தெரிவித்து, புகாரின் தன்மையை மட்டும் தெரிவித்தால் போதும்.அந்த எண்ணை பதிவிட்டதும், அதற்குரிய முகவரியை, ஊழியர்கள் கணினியில் தாங்களே கண்டறியும் வகையில் மென்பொருள் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், புகார்களை விரைந்து பெற்று, தீர்வு காண முடியும்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மையத்தில் அளிக்கப்படும் புகார் உடனே கணினியில் பதிவு செய்யப்பட்டு, அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. புகார்தாரருக்கு புகார் எண், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது; விரைந்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவோர், புகார் எண்ணை அதிகாரிகளிடம் தெரிவித்தால், எடுத்த நடவடிக்கைகளை, கணினியில் அறியலாம். யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று நுகர்வோரும் கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X