அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., 'பூத் கமிட்டி' அமைத்தல்; தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை-உள்ளாட்சி தேர்தலுக்கு முன், தமிழகம் முழுதும் 'பூத் கமிட்டி' அமைக்கும் பணிகளை முடிக்க, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடன், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன்பின், மாநிலம்முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு

சென்னை-உள்ளாட்சி தேர்தலுக்கு முன், தமிழகம் முழுதும் 'பூத் கமிட்டி' அமைக்கும் பணிகளை முடிக்க, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடன், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன்பின், மாநிலம்முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்தல்களிலும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கணிசமான இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்தவும், தேர்தல் முடிந்த பின், கட்சி பணிகளின் கட்டமைப்புகளை புதுப்பித்து, கட்சி வளர்ச்சியில் தீவிரம் காட்டவும் காங்., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட, வட்டார, நகர, கிராம அளவில் கட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது, தமிழகம் முழுதும் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

அக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் அழகிரி தலைமை வகித்தார்.மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செல்வப்பெருந்தகை, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி, தமிழ்ச்செல்வன்,காண்டீபன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் முடிக்கப்பட்ட, முடிக்கப்படாத பூத் கமிட்டி பட்டியல் குறித்த விபரங்களை, மேலிட தலைவர்களிடம் விளக்கினர்.பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில், 80 சதவீதம் முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மீதமுள்ள 20 சதவீத பணிகள் முடிவடையவில்லை என, சில நிர்வாகிகள் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X