கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை கோரியவரின் மனுவை பரிசீலிக்க உத்தரவு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சென்னை--இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளிக்கு, இந்திய குடியுரிமை கோரிய மனுவை, மத்திய அரசு பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், இரும்பூதிபட்டியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:என் பூர்வீகம் தமிழகம்.தேயிலை தோட்டத் தொழிலுக்காக, தமிழகத்தில் இருந்து என் முன்னோர்கள் இலங்கை சென்றனர். இலங்கையில்

சென்னை--இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளிக்கு, இந்திய குடியுரிமை கோரிய மனுவை, மத்திய அரசு பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், இரும்பூதிபட்டியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:என் பூர்வீகம் தமிழகம்.தேயிலை தோட்டத் தொழிலுக்காக, தமிழகத்தில் இருந்து என் முன்னோர்கள் இலங்கை சென்றனர். இலங்கையில் நான் பிறந்தேன். இந்தியா -- இலங்கை ஒப்பந்தப்படி, இந்தியா வர எனக்கு 'பாஸ்போர்ட்' வழங்கப்பட்டது.

அங்கு நடந்த இனப் பிரச்னையால் வர முடியவில்லை. 1990ல், படகில் இந்தியா வந்தேன்.என்னை அகதியாகக் கருதி, முகாமில் தங்க வைத்துள்ளனர். எனக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். அதன்படி, இந்திய குடியுரிமை வழங்கவும், தாயகம் திரும்பியோருக்கான சலுகைகள் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகி, ''ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிப்பர்,'' என்றார். இதையடுத்து, மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து, தகுதி மற்றும் சட்ட அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X