சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் விபத்துக்குள்ளான பாலத்தில் திருச்சி குழு ஆய்வு

Updated : செப் 01, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை : மதுரை புதுநத்தம் ரோடு பறக்கும் பாலத்திலிருந்து சர்வீஸ் பாலம் அமைப்பதற்குரிய கான்கிரீட் செக்மென்ட் விழுந்து விபத்துக்குள்ளான நாகனாகுளம் பகுதியில் திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் பாஸ்கர் குழுவினர் ஆய்வு செய்தனர்.புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா - செட்டிகுளம் 7.3 கி.மீ., பறக்கும் பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை, ஜெ.எம்.சி., நிறுவனம் சார்பில் 2018 முதல்
 மதுரையில் விபத்து, பாலம்  திருச்சி என்.ஐ.டி., குழு ஆய்வு

மதுரை : மதுரை புதுநத்தம் ரோடு பறக்கும் பாலத்திலிருந்து சர்வீஸ் பாலம் அமைப்பதற்குரிய கான்கிரீட் செக்மென்ட் விழுந்து விபத்துக்குள்ளான நாகனாகுளம் பகுதியில் திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் பாஸ்கர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா - செட்டிகுளம் 7.3 கி.மீ., பறக்கும் பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை, ஜெ.எம்.சி., நிறுவனம் சார்பில் 2018 முதல் நடக்கிறது. நாகனாகுளம், திருப்பாலை பறக்கும் பால பகுதியில் வாகனங்கள் மேலே ஏற, இறங்க உயர்மட்ட சர்வீஸ் பாலம் அமைக்க கான்கிரீட் செக்மென்ட் பொருத்தும் பணிகள் தற்போது நடக்கின்றன.


ஆய்வு குழு அமைப்பு



ஆக., 28 மாலை கான்கிரீட் பில்லர் மேல் துாக்கி வைத்த நாகனாகுளம் பகுதி கான்கிரீட் செக்மென்ட் விழுந்ததில் தொழிலாளி பலியானார். இது தொடர்பாக மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து என்.ஐ.டி., பேராசிரியர் பாஸ்கர் குழு ஆய்வு செய்யும் என அமைச்சர்கள் ஏ.வ. வேலு, தியாகராஜன், மூர்த்தி தெரிவித்தனர். அதன்படி அமைத்த குழுவில் திருவனந்தபுரம் என்.ஏ.டி.பி.ஏ.சி., கட்டுமான நிறுவன பொறியாளர் சாம்சன் மாத்தீவ், டில்லி மேம்பால ஆலோசகர் அலோக் டோமிக் இடம் பெற்றுள்ளனர்.


10 நாட்களில் அறிக்கை



பாஸ்கர் கூறியதாவது: 100 கிலோ எடையுள்ள கான்கிரீட் செக்மென்ட்டை நிலை நிறுத்த 250 டன், (280 டயா மீட்டர்) எடை துாக்கும் திறனுள்ள 2 'ஹைட்ராலிக் ஜாக்கி' பயன்படுத்தியதாக கூறினர். இவை 100 கிலோ எடையுள்ள செக்மென்ட் துாக்கும் திறனுள்ளது. ஆனால், ஆய்வின் போது இருந்த 250 டன் ஜாக்கிகள் தான் விபத்திற்கு முன் பயன்படுத்தினார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.
விபத்தின் போது 2 பணியாளர்கள் தான் இருந்துள்ளனர். பேரிங் பொருத்தும் போது கட்டாயம் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் இருக்க வேண்டும். அவர் அன்று இருந்தாரா என ஆய்வுக்கு பின் தான் தெரியும்.
திருவனந்தபுரம், டில்லி குழுவினருடன் ஆக., 4ல் ஆய்வு செய்கிறோம். பணி நடைமுறை, பாதுகாப்பு, விபத்து, ஜாக்கிகளின் தரம் குறித்து 10 நாட்களுக்கு பின் அறிக்கை சமர்பிக்கவுள்ளோம். அது வரை பால பணிகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-ஆக-202117:39:48 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த மாதிரி ஆய்வுகளுக்கு எல்லாம் ஏன் சொரியார் மணியம்மை கல்லூரி பேராசிரியர்களை கூப்பிடுவதில்லை??
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
31-ஆக-202110:21:59 IST Report Abuse
JeevaKiran 100 கிலோ எடையுள்ள கான்கிரீட் செக்மென்ட்டை நிலை நிறுத்த 250 டன், (280 டயா மீட்டர்) எடை துாக்கும் திறனுள்ள 2 'ஹைட்ராலிக் ஜாக்கி' பயன்படுத்தியதாக கூறினர்........................ செய்தி இடிக்கிறதே? 100 கிலோ வா 100 டன்னா?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-202109:18:02 IST Report Abuse
Kasimani Baskaran திராவிட முறையில் பாலம் கட்டினால் இடியத்தான் செய்யும். அதுவும் குறிப்பாக தீமுக முறை இன்னும் மோசமானது. உள்ளே சிமிண்டுக்குப்பதிலாக சிமிண்ட் கலர் சுண்ணாம்பில் கட்டவே வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X