சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகன் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டை, மதுராந்தகம் அடுத்த மாமண்டூரைச் சேர்ந்த ராஜ் என்பவர், கடந்த ஆண்டு வாடகைக்கு எடுத்தார். ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களாக வீடு பூட்டியே கிடந்தது. நேற்று, வாடகை வீட்டிற்கு சென்ற ராஜ்,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, கள்ளநோட்டு அச்சடித்த தந்தை, மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டை, மதுராந்தகம் அடுத்த மாமண்டூரைச் சேர்ந்த ராஜ் என்பவர், கடந்த ஆண்டு வாடகைக்கு எடுத்தார். ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களாக வீடு பூட்டியே கிடந்தது. நேற்று, வாடகை வீட்டிற்கு சென்ற ராஜ், அங்கிருந்த 'ஜெராக்ஸ்' இயந்திரத்தை எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது, பாபு, 'ஆறு மாதங்களாக ஏன் வாடகை பணம் தரவில்லை' என கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாபு, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில், ராஜ் மீது புகார் அளித்தார். விசாரிக்க அங்கு சென்ற எஸ்.ஐ., சங்கர் மற்றும் போலீசார், வீட்டை ஆய்வு செய்தனர்.வீட்டில், 500 ரூபாய் நோட்டு போலியாக அச்சிட்ட, 800 தாள்கள் சிதறி கிடந்தன. தவிர, கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் இயந்திரம், விலை உயர்ந்த பிரின்டர் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்க தேவையான மூலப்பொருட்கள் இருந்தன.இவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, ராஜ், 50, அவரது மகன் எபினேசர், 26, ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய முக்கிய கூட்டாளியான சென்னையைச் சேர்ந்த ரகு என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X