கழிப்பறை வசதி இல்லாத சைதாப்பேட்டை பஸ் நிலையம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை : அதிக பயணியர் புழங்கும், சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில், பொது கழிப்பறை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையின் முக்கிய பஸ் நிலையமாக, சைதாப்பேட்டை பஸ் நிலையம் உள்ளது. பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அடையாறு, தாம்பரம், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் நோக்கி செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில்

சைதாப்பேட்டை : அதிக பயணியர் புழங்கும், சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில், பொது கழிப்பறை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் முக்கிய பஸ் நிலையமாக, சைதாப்பேட்டை பஸ் நிலையம் உள்ளது. பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அடையாறு, தாம்பரம், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் நோக்கி செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன.அதேபோல், கேளம்பாக்கம், பூந்தமல்லி போன்ற பகுதியில் இருந்து, நேரடி பஸ் போக்குவரத்தும் உள்ளது.அருகில், மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளதால், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால், பஸ் நிலையத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இல்லை.ஏற்கனவே இருந்த ஒரு கழிப்பறை, மெட்ரோ ரயில் நிலைய பணிக்காக இடிக்கப்பட்டது.அதன் பின், கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வயதானோர், பெண்கள்மிகவும் சிரமப்படுகின்றனர். அடிப்படை தேவையான, பொது கழிப்பறை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X