சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மூழ்கி இறப்போர் அதிகரிப்பு போலீஸ் கண்காணிக்க வேண்டுகோள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : கடலில் ஆனந்த குளியல் போடும் வாலிபர்கள், அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி விட்டது.சென்னை திருவொற்றியூரில், என்.டி.ஓ.குப்பம், ஒண்டி குப்பம், திருச்சினாங்குப்பம், கிளிஜோசியம் நகர், திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே.குப்பம் கடற்கரையும், எண்ணுாரில் பாரதியார் நகர், சின்னகுப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் போன்ற கடற்கரைகள் உள்ளன.ஊரடங்கில்

திருவொற்றியூர் : கடலில் ஆனந்த குளியல் போடும் வாலிபர்கள், அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி விட்டது.

சென்னை திருவொற்றியூரில், என்.டி.ஓ.குப்பம், ஒண்டி குப்பம், திருச்சினாங்குப்பம், கிளிஜோசியம் நகர், திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே.குப்பம் கடற்கரையும், எண்ணுாரில் பாரதியார் நகர், சின்னகுப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் போன்ற கடற்கரைகள் உள்ளன.ஊரடங்கில் தளர்வுகளாலும், பள்ளிகள் விடுமுறை என்பதாலும் செங்குன்றம், அம்பத்துார், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் இருந்து படையெடுக்கும் வாலிபர்கள், திருவொற்றியூர், எண்ணுார் பகுதி கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.ஆழம் தெரியாமல் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

இதுபோல், கடந்த இரு மாதங்களில் மட்டும், ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.எனவே, கடற்கரைகளை ஒட்டியிருக்கும் எண்ணுார் மற்றும் திருவொற்றியூர் போலீசார், மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடற்கரைகளை கண்காணித்து, ஆழத்திற்குச் சென்று குளியல் போடும் வாலிபர்களை விரட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இல்லாவிட்டால், உயிரிழப்பு தொடர்கதையாகி விடும் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X