பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் நேரடி கொள்முதல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார்.அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத்,எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, சண்முகசுந்தரம், நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டப்பணிகள், ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் தேர்வு குறித்து
 தேங்காய் நேரடி கொள்முதல்

திருப்பூர்:மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார்.அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத்,எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, சண்முகசுந்தரம், நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டப்பணிகள், ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.தொற்று குறைந்துள்ளதால், வளர்ச்சி பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். பணிகள் குறித்து மக்கள் அறியும் வகையில், மதிப்பீடு விவரங்களை தெளிவாக வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரேஷன் கடை கட்டுவதில், மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்கும் தொகையில் உள்ள வேறுபாட்டை சரிசெய்தல், இயற்கை சீற்றத்தால் பயிர் பாதித்தால், விரைவாக நிவாரணம் வழங்குதல், மத்திய அரசு, தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்யாமல், தேங்காயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை முறைப்படுத்தி, அலுவலர்கள் வேகமாக முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X