ஸ்வைப்பிங் மிஷினால் பங்க் ஊழியர் மீது தாக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஸ்வைப்பிங்' மிஷினால் 'பங்க்' ஊழியர் மீது தாக்கு

Added : ஆக 31, 2021
Share
சிந்தாதிரிப்பேட்டை : சிந்தாதிரிப்பேட்டையில் பெட்ரோல் 'பங்க்' ஊழியரை, 'ஸ்வைப்பிங்' மிஷினால் தாக்கிய மர்மநபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை, நாவல்பூரைச் சேர்ந்தவர் கணேஷ், 44. இவர், அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், 50 ரூபாய்க்கு

சிந்தாதிரிப்பேட்டை : சிந்தாதிரிப்பேட்டையில் பெட்ரோல் 'பங்க்' ஊழியரை, 'ஸ்வைப்பிங்' மிஷினால் தாக்கிய மர்மநபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை, நாவல்பூரைச் சேர்ந்தவர் கணேஷ், 44. இவர், அண்ணாசாலை, சிம்சன் அருகே உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு, கணேஷிடம் வீண் தகராறு செய்து, ஸ்வைப்பிங் மிஷினால் தாக்கினர். இதில் கணேஷின் நான்கு பற்கள் உடைந்தன. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.இரண்டு மாதத்திற்கு முன், இதை மர்மநபர்கள் பெட்ரோல் குறைவாக போட்டதாக தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X