பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் கட்சியினரின் 'பிடுங்கல்' : மழை நீர் வடிகால் பணி 'ஜவ்வு'

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
மாதவரம் : அரசியல் கட்சியினரின், 'பிடுங்கல்' காரணமாக, உலக வங்கியின் ௩,௦௦௦ கோடி ரூபாய் நிதி மூலம், மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் பணிகள் அரைகுறையாகி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில், மழை வெள்ளத்தை தடுத்து, மழை நீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வதற்காக உலக வங்கி நிதி திட்டம் மூலம், 3,000 கோடி
 அரசியல் கட்சியினரின் 'பிடுங்கல்' : மழை நீர் வடிகால் பணி 'ஜவ்வு'

மாதவரம் : அரசியல் கட்சியினரின், 'பிடுங்கல்' காரணமாக, உலக வங்கியின் ௩,௦௦௦ கோடி ரூபாய் நிதி மூலம், மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் பணிகள் அரைகுறையாகி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில், மழை வெள்ளத்தை தடுத்து, மழை நீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வதற்காக உலக வங்கி நிதி திட்டம் மூலம், 3,000 கோடி ரூபாய் மதிப்பில், 750 கி.மீ., நீளத்திற்கான கொற்றலையாறு வடிகால் திட்டப்பணிகள் கடந்தாண்டு துவங்கின.


பங்கு வேண்டும்

கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தல் விதி ஆகியவற்றால் உடனடியாக துவங்காத பணிகள், இந்தாண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின், மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான மாதவரம், அம்பத்துார், மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட மண்டலங்களில் துவங்கி நடந்து வருகின்றன.

மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், அதற்காக வெட்டப்படும் பள்ளத்தில் இருந்து எடுக்கும் மண்ணை, மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இருப்பு வைப்பர்.ஒரு சில வாரத்திற்குப் பிறகு, வடிகால் பணி முடிந்த இடங்களை சீரமைக்க, இருப்பு வைத்திருக்கும் மண்ணை, வடிகாலின் பக்கவாட்டில் உள்ள இடைவெளியில் நிரப்பி, 'சமன்' செய்வது வழக்கம்.அப்படி எடுக்கப்படும் சவுடு, கிராவல் மண்ணை, தங்களுக்கு வேண்டும் என ஒப்பந்ததாரர்களை மிரட்டி, அந்தந்த பகுதி ஆளும் கட்சி நிர்வாகிகள் பறித்து, தனியாருக்கு விற்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியினரும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என, ஆளும் கட்சியினர் பாணியில் மிரட்டி, தங்களுக்கு தேவையான மண்ணை பறித்துச் செல்வதாக கூறப்படுகிறது.இதனால், வடிகால் பணி முடிந்த இடங்களில், பக்கவாட்டு இடைவெளி பள்ளங்களை நிரப்புவதற்கு, ஒப்பந்ததாரர்கள் புதிதாக மண்ணை விலை கொடுத்து வாங்க வேண்டிய, நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.


நெருக்கடி

மேலும் பலர், சாலையை ஆக்கிரமித்து தங்கள் வாகனங்களை நிறுத்தவும், வீட்டிற்குள் சென்று வர வசதியாக சாலையை ஆக்கிரமித்து, சரிவு பாதையும் அமைத்துள்ளனர்.மேற்கண்ட பிரச்னைகளால், மழை நீர் வடிகால் பணியை விரைவாக முடிக்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறுகின்றனர். இதனால், பல இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், சென்னை மாநகராட்சியில், மழை நீர் தேங்கும் தாழ்வான இடங்கள் எவை என்பதை, 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு கண்டறிந்து, மழை நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்காக, உலக வங்கியிடம் நிதி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது, ஒரு சிலரின் சுயநலத்திற்காக, அத்தியாவசிய மழை நீர் வடிகால் திட்டம், அரைகுறையாகி கிடப்பில் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி ஓய்வுபெற்ற அதிகாரி கூறியதாவது:இந்த திட்டம் சென்னை நகரின், சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கானது. நெருக்கடி காரணமாக, இது குறித்து, மாநகராட்சி நிர்வாகம் அவசர முடிவெடுக்காமல், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.


நடவடிக்கை

சென்னையில் மழை தொடரும் நிலையில், 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்து, மீண்டும் ஒரு முறை தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, மழை நீர் வடிகால் திட்டப்பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான், பருவ மழையின் போது, வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம்.ஒரு திட்டத்திற்கு நிதி கிடைத்து, அதை செயல்படுத்தாமலோ, காலம் தாழ்த்தியோ வீணடிக்கக் கூடாது. மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X