பொது செய்தி

தமிழ்நாடு

'மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல'

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
மதுரை : ''மதநம்பிக்கை வழிபாடு, சடங்கு ஆகியவற்றில் தலையிடக்கூடாது என அரசியல் சாசன சட்டம் கூறினாலும், ஹிந்து மதத்தில் மட்டும் அரசுகள் தொடர்ந்து தலையிட்டு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன். அது நல்ல அறிகுறி அல்ல'' என மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தமிழக கோயில் கலை, கலாசார
'மத சடங்குகள், கோவில் வழிபாட்டில் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல'

மதுரை : ''மதநம்பிக்கை வழிபாடு, சடங்கு ஆகியவற்றில் தலையிடக்கூடாது என அரசியல் சாசன சட்டம் கூறினாலும், ஹிந்து மதத்தில் மட்டும் அரசுகள் தொடர்ந்து தலையிட்டு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன். அது நல்ல அறிகுறி அல்ல'' என மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழக கோயில் கலை, கலாசார மரபு என்பது பிற மாநிலங்களோடு மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. ஆகமங்கள், கட்டடக்கலை, வழிபாட்டு முறைகள், திருவிழாக்களில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

கோயில்களின் வழிபாட்டு முறைகளில் பொது அம்சங்கள் என சில இருந்தாலும், தனிச் சிறப்புகள் பல உண்டு. அவை அந்தந்த சமய உட்பிரிவுக்கான ஆகமங்கள், பத்ததிகள், தலபுராணங்கள், செவிவழிச் செய்திகள், கோயிலை கட்டியவர்களின் சொந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்படுபவை.

சைவக் கோயில்களை பொருத்தவரை அவற்றுக்கான மூல நுால்கள் சைவ ஆகமங்கள். மூல ஆகமங்கள் 28, உப ஆகமங்கள் 207. தவிர 7ம் நுாற்றாண்டு முதல் பல ஆகமங்களுக்கு பல பெரியோர்களால் இயற்றப்பட்ட உரைகள் இருக்கின்றன. போஜதேவர், சோமசம்பு ஆசார்யர், அகோர சிவாசார்யார் போன்ற ஆச்சார்யர்கள் ஆகமங்களையெல்லாம் திரட்டியெழுதிய அன்றாட வாழ்க்கை முறையை விளக்குகின்ற நித்யபூஜை, கும்பாபிேஷகம், திருவிழா, ப்ராயச்சித்தம், கால நிர்ணயம், திருப்பணி தொடர்பான நுால்கள் என ஏராளமாக உள்ளன.
மன்னர்கள் காலம் தொடங்கி ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளில், செப்பேடுகளில் அக்கோயில் பூஜை முறைகள் தொடர்பான விஷயங்கள், பூஜை செய்பவர்கள் பற்றிய குறிப்புகள் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய அனைத்தும், திருக்கோயில்கள் நிர்வாகத்தில் முதன்மை அதிகாரத்தை ஆகமங்கள் அத்திருக்கோயிலின் ஆச்சார்யருக்கு வழங்கியுள்ளன என்பதை காட்டுகின்றன.


முதன்மை அதிகாரம் பெற்ற ஆசார்யர் என்ன செய்யவேண்டும்latest tamil news
ஆசார்யரானவர் ஒரு கோயில் தொடர்பான பணிகள் பலவற்றை கணக்கில்கொண்டு அர்ச்சகர், அலங்கர்தா, சாதகர், வாசகர் ஆகிய பொறுப்புகளில் தக்க சிவாசார்யர்களை நியமிக்க வேண்டும். பிறகு திருவிழாக்கள் உள்ளிட்ட சடங்குகளை மட்டும் செய்துகொண்டு தினசரி வழிபாடுகள் முறையாக நடப்பதற்கு வழிகாட்டிக்கொண்டு சிவ ஆகமங்களைப் படித்து ஆய்வு செய்து சிந்தனை செய்துகொண்டே இருக்கவேண்டும் என சிவ ஆகமங்கள் கட்டளையிடுகின்றன. அப்போதுதான் கோயில்களில் ஆகமத்திலிருந்து வழுவாமல் நடைபெற முடியும்.
இவ்விஷயங்கள் கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படுகின்றன. பெரிய புராணத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையிலும் ஆதிசைவர்கள்தான் பூஜை செய்துவருகிறார்கள். ஆனால் வரலாறு வேறுவிதமான சித்திரத்தை அளிக்கிறது. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிகாலத்தில் அரசியலிலும் ஆட்சியிலும் செல்வாக்கு மிகுந்திருந்த பல்வேறு சமூகத்தினர் கோயில் நிர்வாகங்களை கைப்பற்றினர்.ஆதிசைவ சிவாசார்யார்களும் பட்டாசார்யார்களும் வழிபாடு எனப்படும் கோயில் உள்துறை நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரங்களை இழந்தவர்களாகி, வெறும் அர்ச்சகக் குடிகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


அரசின் சலுகைகள் இல்லைஎல்லாவற்றையுமே சட்டரீதியாக நிறைவேற்றிவந்த அரசுகள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சிறுபான்மைக் குடியினர் என்ற பாதுகாப்பு சலுகையைக்கூட சட்டரீதியாக அர்ச்சகக் குடிகளுக்கு வழங்க முன்வரவில்லை. இவற்றையெல்லாம் தாண்டி ஹிந்து மதத்தில் நம்பிக்கையே இல்லாதவர்கள், ஹிந்து மதத்தை சீர்திருத்தவேண்டும் என்று கூறிக்கொண்டு வெளியிட்ட தங்கள் விருப்பங்களையெல்லாம், திருக்கோயில் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுகள் வலிந்து திணிக்க ஆரம்பித்தன.
மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பண்பாட்டு தொடர்ச்சிகொண்ட பழக்கவழக்கங்களில் தலையிட்டு அவற்றை முற்றிலுமாக நிறுத்துவதோ அல்லது புதிய முறைகளைப் புகுத்துவதோ அரசியல் சாசனப்படி சரியா? கோயில் சொத்துக்கள் பலரால் சூறையாடப்பட்டு வந்த நேரத்தில் அவற்றை முறையாக நிர்வகித்து வருமானத்தைப் பெருக்கத் தோன்றிய ஹிந்து சமய அறநிலையச் சட்டம், அர்ச்சகர் நியமனம் தொடங்கி, வழிபாட்டுமுறை வரை அனைத்திலும் தலையிடுவது முறையா?


கேரளா போன்று அத்துமீறல்மதநம்பிகை வழிபாடு, சடங்கு ஆகியவற்றில் தலையிடக்கூடாது என அரசியல் சாசன சட்டம் கூறினாலும், ஹிந்து மதத்தில் மட்டும் அரசுகள் தொடர்ந்து தலையிட்டு தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன்? கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, மூடநம்பிக்கை ஒழிப்பு, சீர்திருத்தம், சமூகநீதி, சமநீதி என்ற பெயர்களில் எல்லாம் ஹிந்து மதம் மட்டுமே தொடர்ந்து குறிவைக்கப்படுவதன் மர்மம், பின்னணி என்ன? சபரிமலை வழக்கில் சட்டத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொன்டு கேரள அரசு அத்துமீற முயன்றதை போல தமிழகத்திலும் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இன்றைய நிலையில் கோயில் நிலங்கள் பொதுச்சொத்து என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுவதைப்போல ஹிந்துக்களின் அடையாளங்களை அழித்துவிட்டால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எஞ்சியிருக்கும் கோயில் நிலங்கள், அவற்றிலுள்ள விலைமதிப்பிட இயலாத செப்புத் திருமேனிகள், கல் திருமேனிகள், தங்கம், வெள்ளி, வைர, வைடூர்யம் முதலிய ரத்தின ஆபரணங்கள் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப்படும் அபாயம் உருவாகும். அர்ச்சக குடிகள் விவகாரத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றுபட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும்.


கூட்டமைப்பு அவசியம்ஆதிசைவர்கள், வைகானச - பாஞ்சராத்திர பட்டாசாரியார்கள் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் அனைவரும் இணைந்து அர்ச்சகக் குடிகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி அரசின் அநீதிப்போக்கை எதிர்த்து சட்டரீதியாகப் போராட முன்வரவேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மத சடங்குகளிலும், கோயில் வழிபாடுகளிலும் அரசு தலையிடுவது நல்ல அறிகுறி அல்ல. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
01-செப்-202113:30:06 IST Report Abuse
sankaseshan சந்தியா வந்தனம் 4 வைது வர்ணத்தவரை தவிர மற்றவர்கள் செய்யவேண்டும் காலப்போக்கில் நின்று விட்டது பிரமணர்களிலேயே பலர் இப்போது செய்வதில்லை. காயத்ரி சொல்லுவதால் நாட்டுக்கு நல்லது,நம்பிக்கை முக்கியம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-செப்-202109:54:45 IST Report Abuse
sankaseshan உனக்கு சொந்த வீடு ஹிந்து தர்மமா இருக்க முடியாதே பாவிகள் அல்லது மூர்க்கங்கள் உனக்கு சொந்த கார ங்களாக இருக்கணும்
Rate this:
Cancel
sugumar s - CHENNAI,இந்தியா
31-ஆக-202113:44:34 IST Report Abuse
sugumar s First of all, all temples in TN should be relieved from the clutches of HRCE. Temples can be managed by Private Trusts with people well versed in Temple rituals.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X