கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை; வங்கதேச எல்லையில் அதிரடி

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-வங்கதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்களில் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் மாவட்டம் சங்ரபந்தா எல்லை வழியாக நேற்று முன்தினம் வங்க தேசத்தில் இருந்து 20 கடத்தல்காரர்கள் நம்

புதுடில்லி-வங்கதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்களில் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.



latest tamil news


நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் மாவட்டம் சங்ரபந்தா எல்லை வழியாக நேற்று முன்தினம் வங்க தேசத்தில் இருந்து 20 கடத்தல்காரர்கள் நம் எல்லைக்குள் ஊடுருவினர்.


latest tamil news



கண்டனம்

பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அவர்களை எச்சரித்து திரும்பச் செல்லும்படி கூறினர். இதை ஏற்க மறுத்த அவர்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தங்கள் பாதுகாப்பு கருதி வீரர்கள் சுட்டதில் இரு கடத்தல்காரர்கள் பலியாயினர்.இது குறித்து வங்கதேச எல்லை காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நம் வீரர்கள், இதுபோல் கடத்தல்காரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
31-ஆக-202111:14:59 IST Report Abuse
Nellai tamilan இருபது பேரை சுட்டாலும் தவறில்லை
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
31-ஆக-202109:37:55 IST Report Abuse
Rajalakshmi கடத்தல்காரர்கள் இருபது பேரையும் சுட்டுக்கொன்றிருக்க வேண்டும். பல காலமாக நம் நாட்டிலிருந்து பசுக்களும், கன்றுக்குட்டிகளும் கடத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். நம் மத்திய அரசும் அசட்டையாகவே இருக்கிறது மோடியின் பிஜேபி உட்பட. பங்களாதேஷின் திருட்டுக்கும்பல் நம் எல்லையை பாதுகாக்கும் வீரர்களை கொடூரமாக தாக்கி கொன்றபோது வாஜ்பாயின் ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியும் அப்படியே.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
31-ஆக-202108:18:03 IST Report Abuse
 N.Purushothaman போட்டு தள்ளுங்க ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X