கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை; வங்கதேச எல்லையில் அதிரடி| Dinamalar

கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை; வங்கதேச எல்லையில் அதிரடி

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3) | |
புதுடில்லி-வங்கதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்களில் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் மாவட்டம் சங்ரபந்தா எல்லை வழியாக நேற்று முன்தினம் வங்க தேசத்தில் இருந்து 20 கடத்தல்காரர்கள் நம்

புதுடில்லி-வங்கதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்களில் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.



latest tamil news


நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தின் கூச்பெஹார் மாவட்டம் சங்ரபந்தா எல்லை வழியாக நேற்று முன்தினம் வங்க தேசத்தில் இருந்து 20 கடத்தல்காரர்கள் நம் எல்லைக்குள் ஊடுருவினர்.


latest tamil news



கண்டனம்

பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அவர்களை எச்சரித்து திரும்பச் செல்லும்படி கூறினர். இதை ஏற்க மறுத்த அவர்கள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தங்கள் பாதுகாப்பு கருதி வீரர்கள் சுட்டதில் இரு கடத்தல்காரர்கள் பலியாயினர்.இது குறித்து வங்கதேச எல்லை காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நம் வீரர்கள், இதுபோல் கடத்தல்காரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X