இது உங்கள் இடம்: ஏன் இந்த வேண்டாத வேலை?

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (122) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்பது சமூக நீதியென்றால், தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும் ஏன் தலைவராக முடிவதில்லை?'பதவிக்கு வாரிசு வர, தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் இல்லை' என்றவர், முன்னாள்
இது, உங்கள், இடம், ஸ்டாலின், சமூக நீதி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்பது சமூக நீதியென்றால், தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும் ஏன் தலைவராக முடிவதில்லை?'பதவிக்கு வாரிசு வர, தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் இல்லை' என்றவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரின் மகன் ஸ்டாலின் தான், தி.மு.க., தலைவராக உள்ளார். இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு, 'பட்டம்' சூட்ட தயார்படுத்துகின்றனர்.

சமூக நீதி என்ற பெயரில் ஆட்சிக்கு ஒன்றும், கட்சிக்கு ஒன்றும் என, 'படம்' காட்டுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?தி.மு.க.,வில் ஏன் கருணாநிதி குடும்பமே தலைவராக இருக்க வேண்டும்? துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்ற, கட்சியிலும், ஆட்சியிலும் நன்கு அனுபவம் வாய்ந்த 'சீனியர்'கள் பலர் இருக்கையில், அவர்கள் ஏன் தலைவராக முடிவதில்லை?அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் தகுதியே இல்லையா? ஸ்டாலினை விட அனுபவம் மிகுந்தோர் தானே அவர்கள்!

தி.மு.க.,வில் பெண் ஒருவர் தலைவராக முடியாது; பட்டியலினத்தவர் தலைவராக முடியாது; கட்சியின் மூத்த உறுப்பினர் தலைவராக முடியாது; முஸ்லிம், கிறிஸ்துவர் யாரும் தலைவராக முடியாது... இது தான் சமூக நீதியா?தி.மு.க.,வை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைப்பது போல, கோவிலில் அர்ச்சகர்களும் இருக்கின்றனர். இதில் என்ன தவறு?


latest tamil news


முதல்வர் ஸ்டாலின் முதலில் தன் கட்சியில் சமூக நீதியை கடைப்பிடித்து காண்பித்து விட்டு, அதன் பின் மற்ற இடங்களில் நிலைநாட்ட முயன்றால், வரவேற்புடையதாக இருக்கும்.கருணாநிதி குடும்பம் தி.மு.க.,வை ஆள, கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், கோவிலில் அர்ச்சகர் விஷயத்திலும் பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே!

புதிதாக அமைந்த தி.மு.க., அரசிடம், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் ஏராளமாய் இருக்கையில் அவற்றிற்கு முக்கியத்துவம் தராமல், தேவையில்லாத பிரச்னைகளை கையில் எடுப்பது ஏன்?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
01-செப்-202100:53:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "எத்தனையோ சீனியர்ங்க இருக்கும்போது மோடி எப்படி பிரதமரானார்ன்னு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்... என்னாது ரத்தம் தக்காளி சட்னி பகோடா மூளையா... ஓகேஓகே...... " இது பாமரம் என்னும் பக்கா டீம்கா கொத்தடிமையின் (அதாவது மன ஆரோக்கியம் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்டில் இருந்து தப்பி வந்த கொத்தடிமையின்) கருத்து மோடியின் அப்பா (தாமோதரதாஸ் மூல்ச்சந்த் மோடி) பிரதமரா இருந்தாரா ? அல்லது பிஜேபியில் செல்வாக்குடன் இருந்து மகனை பிரதமர் வேட்பாளர் பதவியை நோக்கி திணித்தாரா ? அல்லது அந்த மூல்ச்சந்த் மோடியின் அப்பா பிஜேபியில் செல்வாக்குடன் இருந்து மகனை பிரதமர் வேட்பாளர் பதவியை நோக்கி திணித்தாரா ? இவர்கள் யாரேனும் தனது வாரிசை இளைஞர் அணி, தளபதி, செயல் தலைவர் என்று புரொமோஷன் கொடுத்து கட்சியை தங்கத்தட்டில் வைத்து கொடுத்தார்களா ? பொதுவா டீம்கா அல்லக்கைஸ்க்கு சிந்திக்கும் திறன் குறைவு அது இன்னக்கி ப்ரூப் ஆயிருச்சு
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
31-ஆக-202119:44:23 IST Report Abuse
HSR DMK WILL BE DESTROYED BY STALIN . IN UDHAINITHI PERIOD THIS PARTY WILL BE LIKE CONGRESS. SO WAIT. DON'T BE ANNOYED. EVERY HAPPENS FOR GOOD. GOD IS GREAT
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஆக-202118:04:19 IST Report Abuse
Vena Suna வாரிசு அரசு என்கிறீர்களா திமுகவை ? அடக்கொடுமையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X