பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர மக்கள் ஆக்கிரமித்த இடம் அதிகாரிகளால் மீட்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வேலுார்-வேலுார் அருகே ஆந்திர மக்கள் ஆக்கிரமித்த அரசு இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.வேலுார் மாவட்டம் பொன்னை அருகே உள்ள கே.என்.பாளையத்தில், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு கால்நடை தீவன அபிவிருத்தி விதைகள் நடும் திட்டத்தை, கடந்த 17ம் தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.இதற்கு அருகில், ஆந்திர மாநிலம் குடிபாலா கிராமம் வருகிறது. அங்கு வசிக்கும்
 ஆந்திர மக்கள் ஆக்கிரமித்த இடம் அதிகாரிகளால் மீட்பு

வேலுார்-வேலுார் அருகே ஆந்திர மக்கள் ஆக்கிரமித்த அரசு இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.வேலுார் மாவட்டம் பொன்னை அருகே உள்ள கே.என்.பாளையத்தில், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது.

இங்கு கால்நடை தீவன அபிவிருத்தி விதைகள் நடும் திட்டத்தை, கடந்த 17ம் தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.இதற்கு அருகில், ஆந்திர மாநிலம் குடிபாலா கிராமம் வருகிறது. அங்கு வசிக்கும் ஆந்திர மக்கள், 27ம் தேதி இந்த இடத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து, அம்பேத்கர் நகர் என்ற பெயர் பலகையை வைத்தனர்.'இந்த இடம் ஆந்திர மாநிலத்திற்கு தான் சொந்தம்; இதற்கு பட்டா வழங்க வேண்டும்' என நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலுார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில், காட்பாடி தாசில்தார் சரண்யா பேச்சு நடத்தினார். இதில், அந்த இடம் வேலுார் மாவட்டத்திற்கு சொந்தமானது என்பதை தகுந்த ஆவணங்களுடன் கூறினர். ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலைந்து சென்றனர். பின், அங்கு போடப்பட்டிருந்த குடிசையை அகற்றிய அதிகாரிகள், 'அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது' என, 'போர்டு' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X