பொது செய்தி

தமிழ்நாடு

வசூல் பட்டியல் வெளியீடு தொ.மு.ச., நிர்வாகிகள் அதிர்ச்சி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
போக்குவரத்து தொழிலாளர்களிடம், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் நடத்தும் வசூல் பட்டியலை, ஆம் ஆத்மி தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது.தமிழக போக்குவரத்து கழகங்களில், 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கத்தினர் இலகு ரக பணி, பஸ் ஸ்டாண்ட் பணி, வசூல் மிக்க பஸ்களில் பணிகளை பெற்றனர். இதற்காக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பிற தொழிலாளர்களிடம் பயன் பெற்றனர். தற்போது,

போக்குவரத்து தொழிலாளர்களிடம், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் நடத்தும் வசூல் பட்டியலை, ஆம் ஆத்மி தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களில், 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கத்தினர் இலகு ரக பணி, பஸ் ஸ்டாண்ட் பணி, வசூல் மிக்க பஸ்களில் பணிகளை பெற்றனர். இதற்காக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பிற தொழிலாளர்களிடம் பயன் பெற்றனர். தற்போது, போக்குவரத்து கழகங்களில், தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கை ஓங்கியுள்ளது.இந்நிலையில், ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தினர், தொ.மு.ச., கிளை, மண்டல நிர்வாகிகளின் வசூல் பட்டியலை, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

பட்டியலில், 'வண்டி போஸ்டிங் பணிக்கு 12 ஆயிரம் ரூபாய், லைட் டூட்டி 25 ஆயிரம் ரூபாய். டிப்போ டிரான்ஸ்பர் 25 ஆயிரம், ஓ.டி., பணிக்கு 50 ஆயிரம் ரூபாய், தி.மு.க., தலைவர்களின் பிறந்த நாள் நன்கொடை 1,500 ரூபாய், தொ.மு.ச., சந்தா 500 ரூபாய் - ஏஜன்ட், ஆளுங்கட்சி தொழிற்சங்கம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.போக்குவரத்து தொழிலாளர்கள், அதிகாரிகளின் சமூக வலைதளங்களில் இந்த பட்டியல் பரவுவதால், தொ.மு.ச., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X