பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் தங்கும் விடுதிகளுக்கு இழப்பு ரூ.15,000 கோடி! அரசுக்கும் ரூ.2,000 கோடி வருவாய் போச்சு வரி சலுகை எதிர்பார்க்கும் உரிமையாளர்கள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கொரோனா ஊரடங்கால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு, ஒன்றரை ஆண்டுகளில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடுதிகள் வாயிலாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய, 2,000 கோடி ரூபாயும் நிலுவையில் நிற்கும் நிலையில், அரசிடம் வரி சலுகை கேட்டு விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி

கொரோனா ஊரடங்கால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு, ஒன்றரை ஆண்டுகளில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விடுதிகள் வாயிலாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய, 2,000 கோடி ரூபாயும் நிலுவையில் நிற்கும் நிலையில், அரசிடம் வரி சலுகை கேட்டு விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, சென்னைக்கு வேலை தேடி ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம்.இவர்களுக்கு வசதியாக, நகர் முழுவதும், தங்கும் விடுதிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. வசதி, வாய்ப்புக்கு ஏற்ப, இந்த தங்கும் விடுதிகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.

தங்கும் இடம், அதற்கான அடிப்படை கட்டமைப்பு, உணவு வசதிகள் இங்கு செய்து தரப்படும். பல விடுதிகளை, கட்டட உரிமையாளர்களே நடத்தும் நிலையில், குத்தகை மற்றும் வாடகைக்கு கட்டடங்களை பிடித்தும், தங்கும் விடுதி நடத்தும் தொழிலை பலர் செய்து வந்தனர்.லாபகரமாக நடந்து கொண்டிருந்த தங்கும் விடுதி தொழில், கொரோனா ஊரடங்கால் முற்றிலும் முடங்கியது. அரசு, 2020 மார்ச்சில் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு, அதன் பின், இதுவரை திறக்கப்படாத பல ஐ.டி., நிறுவனங்கள், அப்படியே திறந்தாலும், குறைந்த ஊழியர்களை கொண்டு பணி செய்வது, 'ஒர்க் பிரம் ஹோம்' முறையை தொடர்ந்து பின்பற்றுவது போன்ற காரணங்களால், தங்கும் விடுதிகள் திறக்க முடியாத சூழலிலேயே உள்ளன.

இதனால், ஒன்றரை ஆண்டுகளாக வருமானம் இன்றி தவிக்கும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், அரசிடம் வரி விலக்கு கோரி உள்ளனர்.இது குறித்து, தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் சங்க தலைவர் பா.மகேந்திர பூபதி கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதில், பல விடுதிகள் வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. இவற்றின் உரிமையாளர்கள் தங்கள் தொழிலுக்காக, வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி உள்ளனர்.

விடுதிகள் இயங்கிய போது, அவர்களுக்கு தடையின்றி வருமானம் வந்ததால், ஒரு விடுதி உரிமையாளர் ஆண்டிற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை, ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரியை சேர்த்து கட்டினார்.தீர்வுஒன்றரை ஆண்டுகளாக, அனைத்து விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால், வாடகை கட்டடத்தில், விடுதிகளை நடத்தியவர்கள், அவற்றிற்காக வங்கிகளில் வாங்கிய கடன் மாத தவணையை கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.ஆனால், விடுதிகளுக்கான மின் கட்டணம், குடிநீர், வணிக வரி மற்றும் அந்தந்த விடுதிகள் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகளை கட்டி வருகிறோம்.

அரசு, எங்களுக்கு வரி விலக்கு அளித்து உதவுவதுடன், விடுதி நடத்த தேவையான மாவட்ட உரிமம், உணவு பாதுகாப்பு துறை சான்று, தீயணைப்பு துறை உரிமம், கட்டட உறுதிதன்மை சான்று, இவற்றை பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X