சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தை இழந்து கதறிய முதியவர்: தியாகதுருகத்தில் 6 பேர் பலி எதிரொலி

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகத்தில் ஆறு பேர் இறந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை இழந்து தவிக்கும் முதியவரின் கதறல், சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஜெசி, 60; மகள்கள் மோனிகா, 32; ரபேக்காள், 22. மோனிகாவின் கணவர் சங்கர், ஸ்வீடன் நாட்டில் பணிபுரிகிறார்.
 குடும்பத்தை இழந்து கதறிய முதியவர்: தியாகதுருகத்தில் 6 பேர் பலி எதிரொலி

தியாகதுருகம்-தியாகதுருகத்தில் ஆறு பேர் இறந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை இழந்து தவிக்கும் முதியவரின் கதறல், சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஜெசி, 60; மகள்கள் மோனிகா, 32; ரபேக்காள், 22. மோனிகாவின் கணவர் சங்கர், ஸ்வீடன் நாட்டில் பணிபுரிகிறார். இவர்களின் மகன் ஜோஷ்வா, 12. மோனிகா ஊட்டியில் வாங்கிய நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய 26ம் தேதி சென்னையில் இருந்து, 'மகிந்திரா எக்ஸ்யூவி' காரில் புறப்பட்டார்.

அவருடன் தாய் ஜெசி, சகோதரி ரபேக்காள், மகன் ஜோஷ்வா மற்றும் குடும்ப நண்பர்களான காஞ்சிபுரம் மாவட்டம், செம்பாக்கம் சத்தியமூர்த்தி மகன்கள் இமானுவேல், 26; எபினேசர் பெஞ்சமின், 22, உடன் சென்றனர்.ஊட்டியில் பணிகளை முடித்து, நேற்று முன்தினம் 29ம் தேதி சென்னை கிளம்பினர். இமானுவேல் காரை ஓட்டினார். இரவு 8:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே, காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது.இதில் கார், நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனைக் கடந்து, எதிர் சாலைக்குள் நுழைந்தது. அப்போது, எதிர் திசையில் சென்னையில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.பஸ் சக்கரத்தின் அடியில் கார் சிக்கிய நிலையில், 50 அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள 10 அடி பள்ளத்தில் இறங்கியது. இவ்விபத்தில், காரில் சென்ற ஆறு பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மூன்று மணி நேரம் போராடி உடல்களை மீட்டனர்.இறந்தவர்களின் உடல்கள், நேற்று பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது மனைவி, இரு மகள்கள், பேரன் என நான்கு பேரை விபத்தில் பறிகொடுத்த முதியவர் ராஜேந்திரன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.பழுதான கேமரா விபத்துக்கான முழுமையான காரணத்தை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாமல், போலீசார் சிரமப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா, 10 நாட்களுக்கு முன் பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கி பழுதடைந்தது. இதை சீரமைத்துத் தருமாறு, உயர் அதிகாரிகளுக்கு தியாகதுருகம் போலீசார் தகவல் அனுப்பி இருந்தனர். அதை சரி செய்யாத நிலையில், நேற்று முன்தினம் நடந்த விபத்துக்குப் பின், அவசர அவசரமாக நேற்று சீரமைக்கப்பட்டது.

தலைகீழாக தொங்கிய கார்

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது உறவினர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க குணசேகரன் மற்றும் உறவினர்கள் 27 - 50 வயதுள்ள ஒரு பெண் உட்பட ஆறு பேர், நேற்று முன்தினம் 'இனோவா' காரில் சென்றனர். மாலை 6:30 மணிக்கு பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் வளைவில் கார் திரும்பும் போது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. அதே வேகத்தில், அருகில் இருந்த கூரை வீட்டின் மீது மோதிய கார், அந்தரத்தில் தலைகீழாக தொங்கியது. இந்த விபத்தில் ஏழு பேரும் காயமடைந்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த டிரைவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
01-செப்-202104:50:15 IST Report Abuse
NicoleThomson தமிழக சாலையில் இது போன்ற விபத்துகள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது, பொதுமக்களும் ஸ்பீட்லிமிட் என்ன என்பதனை அறிந்து அதற்கேற்ப வண்டி ஓட்டுவதும், லென் டிசிப்ளின் பாலோ பண்ணுவதும் இனியாவது செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X