சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர் பரிசு பெற்ற காளை பலி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி,-எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்ற காளை இறப்பால், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவர், நந்திதேவா என்ற பெயருடைய காளையை வளர்த்து வந்தார். நான்கு ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த எருது விடும் விழாக்களில், இந்த காளை பலமுறை முதல் பரிசை
 தொடர் பரிசு பெற்ற காளை பலி

கிருஷ்ணகிரி,-எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்ற காளை இறப்பால், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவர், நந்திதேவா என்ற பெயருடைய காளையை வளர்த்து வந்தார். நான்கு ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த எருது விடும் விழாக்களில், இந்த காளை பலமுறை முதல் பரிசை வென்றுள்ளது.வேலுார் மாவட்டம் மேல்மயிலில் 2020ல் நடந்த எருது விடும் விழாவில் 1.25 லட்சம் ரூபாய் முதல் பரிசை வென்றது.

பல்வேறு மாவட்ட மக்களுக்கும் இந்த காளையை நன்கு தெரியும்.உடல்நலக்குறைவால், நேற்று முன்தினம் இரவு காளை இறந்தது. இதையறிந்த வேலுார், சேலம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் காளை வளர்ப்போர், செட்டிமாரம்பட்டி சுற்று வட்டார மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, காளை அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X