பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் கலப்பதை தடுக்க வடிகால் திருப்பனந்தாள் ஏரியில் பணிகள் ஜரூர்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பம்மல் : பம்மல், திருப்பனந்தாள் ஏரியில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில், ஏரியை சுற்றி கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.சென்னை, பம்மல் நகராட்சியில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருப்பனந்தாள் ஏரி உள்ளது. இது, ஈஸ்வரன் நகர், அண்ணா சாலை என, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.ஆக்கிரமிப்புகளால், 9 ஏக்கராக சுருங்கி விட்டது.
 கழிவு நீர் கலப்பதை தடுக்க வடிகால் திருப்பனந்தாள் ஏரியில் பணிகள் ஜரூர்

பம்மல் : பம்மல், திருப்பனந்தாள் ஏரியில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில், ஏரியை சுற்றி கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

சென்னை, பம்மல் நகராட்சியில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருப்பனந்தாள் ஏரி உள்ளது. இது, ஈஸ்வரன் நகர், அண்ணா சாலை என, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.ஆக்கிரமிப்புகளால், 9 ஏக்கராக சுருங்கி விட்டது. நகராட்சி நிர்வாகம் பராமரிக்க தவறியதால், அப்பகுதி நலச்சங்கங்கள் முயற்சியால், இவ்வேரி முன்மாதிரியாக மாற்றப்பட்டது.ரூ.10 லட்சம்2005ல், சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மக்கள் நடைபயிற்சி செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டது.

பின், 10 லட்சம் ரூபாய் செலவில், கரையை சுற்றி, சூரிய மின் சக்தி விளக்குகள் பொருத்தப்பட்டன.தினசரி, நுாற்றுக்கணக்கான மக்கள், காலை, மாலையில் நடைபயிற்சி செல்கின்றனர். சமீபகாலமாக, ஏரி முறையாக பராமரிக்கப்படுவதில்லை.குறிப்பாக, சூரிய மின் சக்தி விளக்குகள் சரியாக எரிவதில்லை. மற்றொரு புறம், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரியில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.பல ஆண்டுகளாக கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறிவிட்டது.

கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் போராடிவருகின்றனர்.இந்நிலையில், தொடர் கோரிக்கைக்கு பிறகு, கழிவு நீர் கலப்பதை தடுக்க, 1 கோடி ரூபாய் செலவில், சுற்றி கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.மொத்தம், 6 அடி உயரம், 4 அடி அகலத்திற்கு கால்வாய் கட்டப்படுகிறது. சில இடங்களில், இடத்திற்கு ஏற்ப உயரம் மாறுபடும்.

இப்பணி முடிந்தவுடன், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் வழியாக போக்கு கால்வாய்க்கு சென்றுவிடும்.இரண்டு அடிக்கு மேல் செல்லும் தண்ணீர் மட்டுமே, ஏரியில் கலக்கும். அதனால், மழை காலத்தில், வழிந்தோடும் வெள்ளம் ஏரியிலும், மற்ற நாட்களில் கழிவு நீர் போக்கு கால்வாய்க்கும் செல்லும். வேகமாக நடந்து வரும் இப்பணி, ஓரிரு வாரங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X