பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளில் நடமாடும் பள்ளி தலைமை ஆசிரியர் அசத்தல்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சேலம்: ஜம்பூத்துமலை கிராமத்தில், சைக்கிள் மூலம் நடமாடும் பள்ளியை துவக்கிய தலைமை ஆசிரியர், மாணவரது வீடு தேடிச் சென்று பாடம் நடத்தி வருகிறார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஜம்பூத்துமலை மலை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 2019ல் ஏழு மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கலைச்செல்வன், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவு
சைக்கிள், பள்ளி, தலைமைஆசிரியர், அசத்தல்

சேலம்: ஜம்பூத்துமலை கிராமத்தில், சைக்கிள் மூலம் நடமாடும் பள்ளியை துவக்கிய தலைமை ஆசிரியர், மாணவரது வீடு தேடிச் சென்று பாடம் நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஜம்பூத்துமலை மலை கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 2019ல் ஏழு மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற கலைச்செல்வன், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவு செய்தார்.நவீன தொழில்நுட்ப கல்வி, இசை, பொம்மலாட்டம் மூலம் நகர் பகுதி பள்ளிக்கு போட்டியாக, பாடம் கற்றுக் கொடுக்க முயன்றார்.

தற்போது 21 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இக்கிராமத்தில், மொபைல் போனுக்கு 'சிக்னல்' கிடைக்காததால், இணையவழி பாட வகுப்புகள் நடத்த முடியவில்லை. இதனால், தலைமை ஆசிரியர், பழைய சைக்கிளை விலைக்கு வாங்கி, வண்ணம் தீட்டி தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்களின் சொற்களை எளிமையாக எழுதி, மாணவர்களது வீடு தேடிச் சென்று பாடம் நடத்தி வருகிறார்.


latest tamil news



கலைச்செல்வன் கூறுகையில், ''மலைப் பகுதியில் வசிக்கும் மாணவர்களது கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், எளிதான கல்வி முறையை கற்றுக் கொடுத்து வருகிறேன். ''மாணவர்களது வீடு தேடி சென்று சைக்கிளை நிறுத்தி, பாடம் நடத்தப்படுகிறது. தற்போது, மின்சாரம், சாலை உள்ளதால் இடம் பெயர்ந்த மக்கள் திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
31-ஆக-202112:56:47 IST Report Abuse
Guna நன்றி. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-202112:25:53 IST Report Abuse
vpurushothaman சபாஷ் ஆசிரியர். ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் பதினாயிரம் கோயில் கட்டியதற்குச் சமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X