பொது செய்தி

தமிழ்நாடு

நிதி ஒதுக்கீடு இல்லை; தூய்மை பணிக்கு சிக்கல்; ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சிவகங்கை--தொடக்க,நடுநிலை பள்ளிகளுக்கு துாய்மை பணியாளர் சம்பளம், பொருட்கள் வாங்கும் நிதியை 2019 முதல் அரசு நிறுத்தியதால் பள்ளிகளில் துாய்மை பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பிடம்,பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய துாய்மை பணியாளர் சம்பளம், துப்புரவு பொருட்கள் வாங்க அரசு அந்தந்த ஊராட்சி ஒன்றியம் மூலம் பள்ளி மேலாண்மை குழு வங்கி

சிவகங்கை--தொடக்க,நடுநிலை பள்ளிகளுக்கு துாய்மை பணியாளர் சம்பளம், பொருட்கள் வாங்கும் நிதியை 2019 முதல் அரசு நிறுத்தியதால் பள்ளிகளில் துாய்மை பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பிடம்,பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய துாய்மை பணியாளர் சம்பளம், துப்புரவு பொருட்கள் வாங்க அரசு அந்தந்த ஊராட்சி ஒன்றியம் மூலம் பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தப்படுகிறது. அந்த நிதியில் இருந்து பள்ளி வளாக துாய்மை பணியில் ஈடுபடுவோர் சம்பளம் அதற்கான பொருட்கள் வாங்க செலவிடப்படும்.அரசு தொடக்கப்பள்ளி துாய்மை பணியாளருக்கு மாதம் ரூ.1000 சம்பளம், பினாயில், பிளிச்சிங் பவுடர், ஆசிட் வாங்க ரூ.300 வழங்கப்படும். அரசு நடுநிலை பள்ளி துாய்மை பணியாளருக்கு ரூ.1500 சம்பளம், பொருட்கள் வாங்க 500 என ரூ.2000 ஒதுக்கப்படும். 2019 செப்.,க்கு பின் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு இந்த நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.

இதனால் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய துாய்மை பணி நிதியை மாதந்தோறும் வழங்கிட வேண்டும். அதே போன்று நகராட்சி பள்ளிகளில் நகராட்சி துாய்மை பணியாளர்களை வைத்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X