சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : ஆட்டோக்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.திருவள்ளூர் ரயில் நிலைய வளாகத்தில், ஆட்டோ ஓட்டுனர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும், வட்டார போக்குவரத்து துறையினர், ஆட்டோ ஓட்டுனர்களுடன், ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தில், வட்டார போக்குவரத்து

திருவள்ளூர் : ஆட்டோக்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.

திருவள்ளூர் ரயில் நிலைய வளாகத்தில், ஆட்டோ ஓட்டுனர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும், வட்டார போக்குவரத்து துறையினர், ஆட்டோ ஓட்டுனர்களுடன், ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது:ஆட்டோ ஓட்டுனர்கள், மீட்டரை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்வதில்லை.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.இனிமேல் மீட்டரை பயன்படுத்தி, கட்டணம் வசூலிக்க வேண்டும். சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.மூன்று பயணியருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. ரயில் நிலைய வளாகத்தில், போக்குவரத்திற்கும், ரயில் பயணியருக்கும் இடையூறு இல்லாமல் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி, பயணியரை ஏற்றி செல்ல வேண்டும். மீறினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X