கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை பறிமுதல்: வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மதுரை-சட்டசபை தேர்தலின்போது பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 6 லட்சம் ரூபாயை விடுவிக்க கோரி விவசாயி தாக்கல் செய்த வழக்கில், ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த திராவிட மணி தாக்கல் செய்த மனு:சட்டசபை தேர்தலின்போது, நடத்தை விதிகள் அமலில் இருந்தன. மார்ச் 22ல் முதுகுளத்துார்

மதுரை-சட்டசபை தேர்தலின்போது பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 6 லட்சம் ரூபாயை விடுவிக்க கோரி விவசாயி தாக்கல் செய்த வழக்கில், ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த திராவிட மணி தாக்கல் செய்த மனு:சட்டசபை தேர்தலின்போது, நடத்தை விதிகள் அமலில் இருந்தன. மார்ச் 22ல் முதுகுளத்துார் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், சாயல்குடியில் ஒரு வங்கி வளாகத்தில் ஆய்வு செய்தனர். என்னிடம் 6 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆட்சேபம் தெரிவித்தேன்.விவசாய குத்தகை பணத்தை, கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கணக்கில் செலுத்தச் சென்றேன்.

நகையை அடமானம் வைத்ததற்குரிய ரசீதை சமர்ப்பித்து, தொகையை விடுவிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரியான ராமநாதபுரம் கலெக்டரிடம் முறையீடு செய்தேன். நடவடிக்கை இல்லை. ஏழை விவசாயியான என் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. 6 லட்சம் ரூபாயை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.தேர்தல் கமிஷன் தரப்பு, 'தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும்,

இவ்விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் பங்கு மிகவும் குறைவானதே. தொகையை விடுவிப்பது குறித்து, கலெக்டர் தான் முடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்தது.நீதிபதி, 'விவசாயியான மனுதாரருக்கு தனிப்பட்ட முறையில் 6 லட்சம் ரூபாய் பெரிய தொகை. இதில் விரைவாக முடிவெடுக்க வேண்டும். மனுவை, ராமநாதபுரம் கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். மனுதாரர் விளக்கமளிக்க வாய்ப்பளித்து, 30 நாட்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X