ஐ.டி., பெண் ஊழியர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., பெண் ஊழியர் பலி

Added : ஆக 31, 2021
Share
தர்மபுரி-காதலன் வீட்டு முன் விஷம் குடித்த ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் இறந்தார். இதில் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.தர்மபுரி மாவட்டம், ராஜகொல்லஹள்ளியைச் சேர்ந்தவர் ஞானமொழி, 29; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது தாய்மாமாவின் மகன் குட்டூரைச் சேர்ந்த முரளிதரன். இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்தனர்.ஜார்க்கண்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் முரளிதரன்

தர்மபுரி-காதலன் வீட்டு முன் விஷம் குடித்த ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் இறந்தார். இதில் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், ராஜகொல்லஹள்ளியைச் சேர்ந்தவர் ஞானமொழி, 29; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது தாய்மாமாவின் மகன் குட்டூரைச் சேர்ந்த முரளிதரன். இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்தனர்.ஜார்க்கண்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் முரளிதரன் பணியாற்றுகிறார். முரளிதரனின் பெற்றோர் வேறு பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். இரு நாட்களுக்கு முன், முரளிதரன் வீட்டு முன் அமர்ந்து ஞானமொழி விஷம் குடித்தார். இதை பார்த்தும், முரளிதரன் பெற்றோர் வீட்டு கதவை தாழிட்டுக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஞானமொழியை தற்கொலைக்கு துாண்டியதாக முரளிதரன், அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதியமான்கோட்டை போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதியவே, உடலைப் பெற மறுத்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, உடலைப் பெற்றுச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X