மகனுக்கு திருமணம்? அமைச்சர் மறுப்பு!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகனுக்கு திருமணம்? அமைச்சர் மறுப்பு!

Added : ஆக 31, 2021
Share
மதுரை-''பத்திரப்பதிவுத் துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அத்துறையின் அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:பத்திரப்பதிவுத் துறையில், போலி பத்திரப்பதிவு உள்ளிட்ட பல முறைகேடுகளில் சிக்கிய 10 அலுவலர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யார்

மதுரை-''பத்திரப்பதிவுத் துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அத்துறையின் அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்

.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:பத்திரப்பதிவுத் துறையில், போலி பத்திரப்பதிவு உள்ளிட்ட பல முறைகேடுகளில் சிக்கிய 10 அலுவலர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை பாயும். இத்துறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுடன் துறை மானியக் கோரிக்கையில் பல அறிவிப்புகள் வெளியாகும்.

என் சொந்த ஊரான வெளிச்ச நத்தத்தில் பி.மூர்த்தி என்பவர் மகன் விஜி, பிரதிபா என்ற பெண்ணுடன் நிலக்கோட்டை அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து உள்ளார். அந்த பி.மூர்த்தி நான் என்றும், என் மகன் தியானேஷ், 26, தான் பதிவு திருமணம் செய்துகொண்டார் எனவும் வதந்தி பரவுகிறது.இது, திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என தெரியவில்லை. என் மகனின் எதிர்காலம்பாதிக்கும் என்பதால் பொதுவெளியில் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X