சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, மாமியார் மீது 'ஆசிட்' வீசிய கொடூரன்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்-குடும்ப தகராறில் மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய மாநகராட்சி துாய்மை பணியாளரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம், குகை எஸ்.எம்.சி., காலனியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ், 50; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவர் மனைவி ரேவதி, 47; தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். போதை பழக்கத்துக்கு அடிமையான இயேசுதாஸ், தினமும் போதையில் ரேவதியிடம் சண்டையிடுவது வழக்கம்.'டார்ச்சர்' தாங்க

சேலம்-குடும்ப தகராறில் மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய மாநகராட்சி துாய்மை பணியாளரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், குகை எஸ்.எம்.சி., காலனியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ், 50; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவர் மனைவி ரேவதி, 47; தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். போதை பழக்கத்துக்கு அடிமையான இயேசுதாஸ், தினமும் போதையில் ரேவதியிடம் சண்டையிடுவது வழக்கம்.'டார்ச்சர்' தாங்க முடியாமல், நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தாய் வீட்டுக்கு ரேவதி, கடந்த மே மாதம் சென்றார். குடும்பம் நடத்த வரக் கோரி இயேசுதாஸ் மிரட்டியதால், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில், ரேவதி புகார் அளித்தார்.

இதன்படி, போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். குடும்பம் நடத்த மறுத்து, விவாகரத்து பெற்று கொள்வதாக, ரேவதி எழுதி கொடுத்தார்; 'ரேவதிக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்' என இயேசுதாசும் எழுதி தந்தார்.இதையடுத்து, இரு தரப்பினரும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். தாய் ஆராயியுடன் பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு மாலை 5:30 மணிக்கு ரேவதி சென்றார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த இயேசுதாஸ், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மனைவி, மாமியார் மீது வீசி விட்டு தப்பினார்.அலறி துடித்த இருவரையும், பயணியர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரேவதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆராயி, இரண்டு கைகளில் லேசான காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இயேசுதாசை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X