சூளைமேடில் இடம் தேடுது அஞ்சல் துறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூளைமேடில் இடம் தேடுது அஞ்சல் துறை

Added : ஆக 31, 2021
Share
சூளைமேடு : சூளைமேடில் அஞ்சலகம் செயல்பட, சகல வசதியுடன் கூடிய கட்டடம் தேவைப்படுகிறது. தகுதியான உரிமையாளர்கள் அணுகலாம் என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.சூளைமேடு, அஞ்சலகம் இயங்குவதற்கு அந்தந்த பகுதியிலோ அல்லது அருகாமையிலோ வாடகைக்கு கட்டடம் தேவைப்படுகிறது.கட்டடம், 1,800 சதுர அடி பரப்பளவுடன், தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் தேவை. குறைந்தபட்ச

சூளைமேடு : சூளைமேடில் அஞ்சலகம் செயல்பட, சகல வசதியுடன் கூடிய கட்டடம் தேவைப்படுகிறது.

தகுதியான உரிமையாளர்கள் அணுகலாம் என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.சூளைமேடு, அஞ்சலகம் இயங்குவதற்கு அந்தந்த பகுதியிலோ அல்லது அருகாமையிலோ வாடகைக்கு கட்டடம் தேவைப்படுகிறது.கட்டடம், 1,800 சதுர அடி பரப்பளவுடன், தண்ணீர், கழிப்பறை, மின்சாரம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் தேவை. குறைந்தபட்ச வாடகை ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளாவது இருக்க வேண்டும்.கட்டட உரிமையாளர்கள், தங்கள் விருப்பக் கடிதங்களை, மு.ஸ்ரீராமன், முது நிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை 600 017 என்ற முகவரிக்கு, 17ம் தேதிக்குள் அனுப்பலாம்.பொதுத்துறை, அரசுத்துறை சார்ந்த இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அஞ்சலகம் என்பதால், வாடகைக்கு விடும் கட்டடம் தரை தளமாக இருந்தால் நல்லது.குத்தகை ஒப்பந்தத்தின் பதிவு கட்டணத்தை கட்டட உரிமையாளரே ஏற்க வேண்டும். ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்த விண்ணப்பங்களையும் ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் அஞ்சல் துறைக்கு அதிகாரம் உண்டு.இவ்வாறு சென்னை மத்திய கோட்ட அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X