போலீஸ் டைரி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
16 'டூ - வீலர்'கள் பறிமுதல்திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த ராமாபுரம் பகுதியில், சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் ராமாபுரம் கிராமத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, ஒரு பொது இடத்தில் கும்பலாக பணம் வைத்து சீட்டாட்டம்

16 'டூ - வீலர்'கள் பறிமுதல்
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த ராமாபுரம் பகுதியில், சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் ராமாபுரம் கிராமத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, ஒரு பொது இடத்தில் கும்பலாக பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியவர்களை மடக்கி பிடித்து, 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதவிர, அங்கிருந்த 16 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அரக்கோணம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 27 - 52 வயதுள்ள எட்டு பேரை கைது செய்தனர்.பெண் தீக்குளித்து பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி காலனியைச் சேர்ந்தவர் ராஜூ மனைவி பவ்யா, 28. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்து, ராவின், 10, என்ற மகனும், ரட்சிகா, 8, என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களாக ராஜூ வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் போதிய வருமானம் இல்லாததால், பவ்யா மனவேதனையில் இருந்தார்.நேற்று முன்தினம் வீட்டின் அருகே மனமுடைந்து பவ்யா உடல் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X