சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளவு துறை போலீசிடம் ரூ.1 லட்சம் 'ஆட்டை'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சூளைமேடு : அலுவலகத்தில் இறக்கி விடுவதாக அழைத்துச் சென்று, உளவுத் துறை போலீஸ்காரரின் மொபைல் போனை திருடி, 'கூகுள் பே' மொபைல் செயலி மூலம் 1 லட்சம் ரூபாயை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, உளவுத் துறை காவலர் ரவி, 45, அளித்த புகார் மனு:நான், 28ம் தேதி பணிக்கு புறப்பட்ட போது, நன்கு அறிமுகமான சூளைமேடு, பஜனை கோவில்

சூளைமேடு : அலுவலகத்தில் இறக்கி விடுவதாக அழைத்துச் சென்று, உளவுத் துறை போலீஸ்காரரின் மொபைல் போனை திருடி, 'கூகுள் பே' மொபைல் செயலி மூலம் 1 லட்சம் ரூபாயை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, உளவுத் துறை காவலர் ரவி, 45, அளித்த புகார் மனு:நான், 28ம் தேதி பணிக்கு புறப்பட்ட போது, நன்கு அறிமுகமான சூளைமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அஜய் விக்கி, 25, என்பவர், 'கலங்கரை விளக்கம் வழியாக செல்கிறேன். அங்கு இறக்கி விடுகிறேன்' என்றார்.அவரது காரில் ஏறியதும், அதில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்திலேயே ஊசி போட்டது போல் இருந்தது.பின், என் மொபைல் போனை எடுத்து, 'கூகுள் பே' செயலியை பயன்படுத்தி 1 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர். பின், பல்வேறு இடங்களில் சுற்றி, மெரினாவில் என்னை இறக்கிவிட்டு தப்பினர்.சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தையும், மொபைல் போனையும் மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் விசாரிக்கிறார். காவலரிடம், அவருக்கு பரிட்சயமான நபர்கள் திருடியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம், சூளைமேடில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X