சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர், 32. இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கவிதா, 28, என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கவிதா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.திருமணமான அடுத்த

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர், 32. இவருக்கும், சென்னையைச் சேர்ந்த கவிதா, 28, என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கவிதா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.திருமணமான அடுத்த சில மாதங்களில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனோகர், மனைவியை பிரிந்து, சோத்துப்பாக்கத்தில் உள்ள தன் அக்கா வீட்டில் தங்கி வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாக்கம் கிராமத்தில் உள்ள தன் கணவர் வீட்டில், கவிதா துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளம்பெண் தற்கொலை குறித்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X