பொது செய்தி

தமிழ்நாடு

வாலாஜாபாத் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.வாலாஜாபாத் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2016ம் ஆண்டு இறுதியில், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு தவிர, அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று, கொரோனா வார்டு துவக்குவதற்கு
 வாலாஜாபாத் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த ஆர்வம்

வாலாஜாபாத் : வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.வாலாஜாபாத் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2016ம் ஆண்டு இறுதியில், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு தவிர, அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று, கொரோனா வார்டு துவக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.தற்போது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மருத்துவமனை நிர்வாகம் துவக்கி உள்ளது. நேற்று நடந்த சிறப்பு முகாமில், ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.கொரோனா தடுப்பூசி செலுத்த, காஞ்சிபுரம் மற்றும் அய்யன்பேட்டைக்கு சென்ற வாலாஜாபாத் நகர மக்கள், இப்பகுதியிலேயே தடுப்பூசி போடுவதால் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X